தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

இணைய குற்றங்களை தடுக்க புதிய பொலிஸ் பிரிவு லண்டன் மேயர் சாதிக் கான்

இணைய குற்றங்களை சமாளிக்கும் வகையில் லண்டன் மேயர் சாதிக் கான், புதிய பொலிஸ் பிரிவொன்றை ஆரம்பித்துள்ளார்.

புலனாய்வு அதிகாரியொருவரின் தலைமையில் ஐந்து பெருநகர பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கியதாக இப்புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை தகவல்களை சேகரிப்பதன் மூலம் இணைய குற்றங்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தல், புதிய விசாரணை முறைகளை பரிசோதித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இப்புதிய பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டுவிட்டர் மற்றும் பேஸ்புக் முறைகேடுகள் உள்ளிட்ட இணைய குற்றங்களை அடையாளம் காணுதல், தடுத்தல் மற்றும் விசாரணை செய்வதற்கென இப்பிரிவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்

wpengine

கஞ்சா பாவிப்பவரா நீங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி

wpengine

இலவு காத்த கிளிபோல் ஆகக்கூடாது.

wpengine