பிரதான செய்திகள்

இணக்க அரசியல் இதற்கு தானா?

இணக்க அரசியலில் கிடைத்தது இது தானா? என எழுதப்பட்டுள்ள சுவரொட்டிகள் யாழ். மற்றும் அதனை அண்மித்த நகரப்பகுதிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்திய அரசின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கம் கடந்து வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவரினுடைய மகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் கலந்துகொண்டார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

எனினும், இந்நிகழ்வானது வடக்கு மக்களின் மத்தியில் பெரும் விமர்சனத்ததை ஏற்படுத்தியிருந்தது.

ஜனாதிபதியின் வருகையினையொட்டி, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து எதிர்பார்ப்பிலிருந்த வடக்கு மக்களுக்கு இதுவொரு பாரிய ஏமாற்றமாக அமைந்திருந்தது.625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

இந்நிலையில், யாழ். மற்றும் அதன் அண்மித்த நகர் பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts

தமிழ் இனத்தை இனிமேல் ஒன்றிணைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான்-விக்கினேஸ்வரன்

wpengine

பணப்பரிமாற்றத்தின் போது அவதானமாக செயற்படுங்கள்! வவுனியாவில் விழிப்புணர்வு

wpengine

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்! நல்லாட்சி அரசின் சாதனை

wpengine