அடுத்த மூன்று மாதங்களுக்கான அரசின் செலவீனங்களை ஈடு செய்யும் இடைக்கால வரவு செலவு அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் உலக பொருளாதார நிலைமை மட்டுமல்லாது, இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆராய்ந்து மக்களுக்கு வழங்கக் கூடிய அதிகளவான நிவாரணங்கள் இடைக்கால வரவு செலவு அறிக்கையில் உள்ளடக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பத்தில் கொண்டு வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் கடந்த நவம்பர் 5ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்தது.
ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக அதனை சமர்ப்பிக்க முடியாது போனது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.