பிரதான செய்திகள்

இடம்பெயர்ந்தோருக்கு வாக்காளராக பதிவுசெய்ய நடவடிக்கை.

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் முகாம்களில் தங்கியுள்ள அனைத்து மக்களையும் வாக்காளர்களாக பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தப்பாதிப்புக்கு உள்ளான பல மக்கள் வாக்காளர்களாக பதிவு செய்துக்கொள்ளப்படவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தி இருந்தது.

இது சம்பந்தமாக  தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை தொடர்பு கொண்டு வினவிய போது, அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து பிரஜைகளுக்கும், வாக்குரிமை வழங்கப்படும் என்று அவர்
தெரிவித்துள்ளார்.

Related posts

அமைப்பாளர் பதவியினை இழந்த பிரதி அமைச்சர்

wpengine

ரணில் 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை

wpengine

தலைமன்னார், தாராபுரம் பகுதியில் ஒருவர் பணத்துடன் கைது

wpengine