(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)
கிழக்கு முதலமைச்சருடன் முரண்பட்ட குறித்த கடற் படை அதிகாரி கொழும்பிற்கு இடமாற்றப்பட்டதாக தற்போது உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளிக்கிளம்பி வருகின்றன.இதனை அறிந்த சிலர் இது மு.காவிற்கு கிடைத்த வெற்றியாக குறிப்பிட்டு வருவது வேடிக்கையானதாகும்.இவ் விடயத்தில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் கிழக்கு முதல்வரைக் கண்டித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கடற் படையின் ஊடகப் பேச்சாளர் அக் குறித்த உயர் அதிகாரி அச் சமயத்தில் நடந்து கொண்ட விதத்தைப் பாராட்டியுள்ளார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரி இலங்கை வந்த பிறகே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறியுள்ளார்.இதனையெல்லாம் வைத்துச் சிந்திக்கும் போது குறித்த இடமாற்றம் அவ் அதிகாரிக்கான தண்டனையாக இராது என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.இது அவருக்குக் கிடைத்த பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமாகவும் இருக்கலாம்.இப்படியும் சிறு கதை ஒன்று வருகிறது.
ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வைத்திருப்பதால் இவ் இட மாற்ற சம்பவத்துடன் ஜனாதிபதிக்கும் சம்பந்தமுள்ளது.குறித்த அதிகாரிக்கு பதவிக் குறைப்பேதுமின்றி அவரைக் கொழும்பிற்கு இடமாற்றிருந்தால் அது தண்டனையுமல்ல.இப் பிரச்சினையின் அடிப்படை ஆளுநருடன் இருப்பதால் குறித்த அதிகாரியை இடமாற்றுவது ஒரு போதும் இப் பிரச்சினைக்கான தீர்வாகப்போவதில்லை.குறித்த கடற் படை அதிகாரி கிழக்கு மாகாணத்தில் இருக்கும் போது மீண்டும் முதலமைச்சரை சந்தித்து இது போன்ற பிரச்சினை மீள தோற்றம்பெற வாய்ப்புள்ளது.இதனைக் தடுக்க வேண்டுமாக இருந்தால் ஒன்று முதலமைச்சரை மாற்ற வேண்டும் அல்லது குறித்த அதிகாரியை மாற்ற வேண்டும்.இதில் குறித்த அதிகாரியையே மாற்ற முடியும்.
சற்று பொறுமையாக இரியுங்கள் நடப்பதைப் பார்ப்போம்.எது எவ்வாறு இருப்பினும் குறித்த அதிகாரியின் இடமாற்றம் தண்டனைக்குரிய இடமாற்றமாக இருந்தால் இன வாதத்தின் கோரத் தாண்டவத்தை நாளை பார்ப்பீர்கள்.இதற்கான முற்று முழுதான பொறுப்பை முதலமைச்சர் ஏற்க வேண்டும்.இதனை இனவாதமாக மாற்ற எங்கே எனக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.கடற் படையும் முதலமைச்சருக்கு எதிரான போக்கோடு இருப்பதால் இது சாதாரணமாகவும் முடிவுறாது.
மு.காவினர்களே!
இது குறித்த அதிகாரிக்கான தண்டனைக்குரிய இடமாற்றமாக இருந்தால் (இருக்காது) அதனைக் கணக்கு எடுக்காதது போன்று விட்டு விடுங்கள்.அல்லாது போனால் இன வாதிகளுக்கு உங்கள் செயல் தீனி போடுவதாக அமைந்து விடும்.நீங்கள் கொக்கரிப்பது ஒரு சமூக வலைத்தளத்தில் என்பதை நினைவூட்டிக் கொள்ளுங்கள்.