பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

இடமாற்றத்தில் சென்ற யாழ். தலைமை பொலிஸ் பதில் பொறுப்பதிகாரியின் மகனை கைது செய்யுமாறு உத்தரவு .

கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி, தண்டனை இடமாற்றத்தில் சென்ற பொலிஸ் அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பொலிஸ் அதிகாரியின் மகன் வழக்கு ஒன்றினை இல்லாது செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாவினை பொதுமகன் ஒருவரிடம் இலஞ்சமாக பெற்றார். இந்நிலையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்தவகையில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டது. இது இவ்வாறு இருக்கையில் குறித்த வழக்கானது திங்கட்கிழமை (10) பொலிஸாரால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்தவகையில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 01.04.2025 இற்குள் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் வாழ்வெட்டு! தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக

wpengine

அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் நினைவு தினம்

wpengine

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த நோர்வே நாட்டின் தூதுவர்!

wpengine