பிரதான செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பில் முதலில் ஈடுபட்டது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

தொடக்கத்தில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி இடையில் தடுமாற, அணி சார்பாக அதிகபட்சமாக பெய்ர்ஸ்டோவ் 43 ஓட்டங்களையும், ஜோ ரூட் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி, அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஜுனத் கான், அறிமுக வீரர் ரூமென் ராயிஸ் தலா 2 விக்கெட்டை சாய்த்தனர்.

இதனைத் தொடர்ந்து 212 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 37.1 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக அசார் அலி 76 ஓட்டங்களையும், பஃகர் ஜமான் 57 ஓட்டங்களையும் குவித்ததுடன், பாபர் அசாம் 38, ஹபீஸ் 31 ஓட்டங்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தானர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

Related posts

பேருவளை முஸ்லிம்களை திரும்பியும், பார்க்காத ராஜித சேனாரத்ன-பியல் நிசந்த குற்றச்சாட்டு

wpengine

மன்னார் நகரசபை பண்டிகைக்கால கடை வழங்கியதில் ஊழல் : நகரசபை முதல்வர் டானியல் வசந்தன்.

Maash

2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இறுதி நிலை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க தீர்மானம்!

Editor