பிரதான செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துடன் அரையிறுதியில் இணையும் பாக்கிஸ்தான்

செம்பியன்ஸ் டிராப்பி கிரிக்கட் தொடர் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கட்டுகளால் வெற்றிகொண்ட பாக்கிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் நிரோஷன் திக்வெல்ல 73 ஓட்டங்களை பெற்றார்.

இந்தநிலையில் பாக்கிஸ்தான் அணி 237 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடியது.

இதன்போது சப்ஃராஸ் அகமட் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், பஃஹர் ஸமன் 50 ஓட்டங்களையும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர்.

போட்டியின் சிறப்பாட்டக் காரராக சப்ஃராஸ் அகமட் தெரிவு செய்யப்பட்டார்.

அதனடிப்படையில் பாக்கிஸ்தான் அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி அரையிறுதிப் போட்டியில் காடிப்ஃ மைதானத்தில் சந்திக்கின்றன.

இதேவேளை பிறிதொரு அரையிறுதி போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் எதிர்;வரும் 15 ஆம் திகதி பேர்மிங்ஹம் மைதானத்தில் மோதவுள்ளன.

அதன்படி, குறித்த போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதிப்போட்டியில் ஓவல் மைதானத்தில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இப்போது நாங்கள் மூன்று பேர்’ தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பிணி

wpengine

ஜப்பான் நாட்டிலும் மஹிந்த ஆசி வேண்டினார்

wpengine

அன்புள்ள அதாவுல்லாஹ் அவர்களுக்கு ஒர் மடல்

wpengine