பிரதான செய்திகள்

ஆளும் கட்சி இராஜங்க அமைச்சர் மீது றிஷாட் வழக்கு தாக்கல்

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜயந்த சமரவீர வெளியிட்ட கருத்தால் தமக்கு சிரமங்களும் கடும் அசௌகரியங்களும் ஏற்பட்டுள்ளதாக ரிஷாட் பதியுதீன் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனக்கு ஒரு பில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு களுத்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜயந்த சமரவீர, ஏப்ரல் 21 தாக்குதலுடன் தான் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியுடன் றிஷாட்,ஹக்கீம் இணைந்து போட்டி

wpengine

வவுனியாவில் புகையிரத கடவை அமைக்க கோரி மகஜர்

wpengine

மன்னார் இ.போ.ச பஸ் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு (படங்கள்)

wpengine