பிரதான செய்திகள்

ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள்

எதிர்க்கட்சியினர் சபைக்குள் கொண்டுவந்திருக்கும் பெனர் உள்ளிட்ட பொருள்கள் பலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதுதொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் சபைக்குள் பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதுதொடர்பில் தேடியறியவேண்டும்.

இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார, ஆளும் கட்சியினரும் சபைக்குள், பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்குவதற்கான பொருள்களை கொண்டுவந்துள்ளனர். அவை தொடர்பிலும் விசாரணைகளை முன்வைக்குமாறு நளீன் பண்டார எம்.பி கேட்டுக்கொண்டார்.

இதன்போது, ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. அத்துடன், பதற்றமான நிலைமையொன்றும் ஏற்பட்டிருந்தது.

Related posts

தமிழ் தேசியத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்

wpengine

Invitation – Photo Exhibition – 29-31 March 2022 – Palestine Land Day

wpengine

வசீம் தாஜூடின் கொலை! ஷிராந்தி,யோசித விசாரணை

wpengine