அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஆளும்கட்சி பா. ம உறுப்பினர்களின் சம்பளம் முழுமையான காசோலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்துக்கு.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை ஆளும் தரப்பே இல்லாதொழித்துள்ளது. நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகருக்கு  உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மூடப்பட்டுள்ளது.

எளிமையாக செயற்படுகிறோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07)  நடைபெற்ற   பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் குறித்த தனியார் உறுப்பினர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்ய வேண்டும்  என்று குறிப்பிடுபவர்கள் தமக்குரிய அனைத்து கொடுப்பனவுகளையும் பெறுகிறார்கள். 

கொடுப்பனவுகளை இரத்துச் செய்ய வேண்டும் என்று கூச்சலிடுவதற்கு முன்னர் சித்ரசிறி அறிக்கையின் பரிந்துரைகளை படித்துப் பாருங்கள்.

ஆகவே கொண்டு வரும் புதிய சட்டமூலம் கடந்த காலத்துக்கு செல்வாக்கு செலுத்தாது. ஆகவே ஆளும் தரப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அவர்களும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறுவார்கள்.

ஆகவே புதிய சட்டமூலத்துக்கு கைகளை மாத்திரமல்ல, இரண்டு கால்களை உயர்த்தி ஆதரவு வழங்கினாலும் உங்களுக்கு (ஆளும் தரப்பு) எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 

தேசிய மக்கள் சக்தியிள் 159 பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் முழுமையான காசோலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்துக்கு செல்கிறது. அங்கிருந்து தான் இவர்களுக்கு சம்பளம் கிடைக்கிறது.

இதை இலஞ்சம் என்றே குறிப்பிட வேண்டும்.ஆகவே வெளிப்படையாக செயற்படுகிறோம் என்று மக்கள் மத்தியில் குறிப்பிட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றாதீர்கள்.

ஆளும் தரப்பில் பல  இலட்சம் கணக்கில் சம்பளம் பெற்ற வைத்தியர்கள்,  விரிவுரையாளர்கள் உள்ளார்கள். கட்சியின் நிதியத்துக்கு பணத்தை அனுப்ப அனுமதி வழங்கி விட்டு எதிர்காலத்தை இல்லாதொழித்துக் கொள்ள வேண்டாம்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை ஆளும் தரப்பே இல்லாதொழித்துள்ளது. நாட்டின் மூன்றாம் பிரஜையான சபாநாயகருக்கு  உத்தியோகபூர்வ இல்லத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. 

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மூடப்பட்டுள்ளது. எளிமையாக செயற்படுகிறோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க வேண்டாம்.

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் சாப்பிட மாட்டோம் என்று குறிப்பிட்டார்கள்.தற்போது ஆளும் தரப்பினர் நன்றாக சாப்பிடுகிறார்கள்.  

உணவு பெறும்  விலை பற்றுச்சீட்டை முகப்பு புத்தகத்தில் சபை முதல்வர் பதிவிடுகிறார். இவ்வாறு செயற்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை இல்லாதொழிக்காதீர்கள். இவ்வாறான கீழ் நிலைக்கு செல்லாதீர்கள். 

Related posts

ஜனாதிபதியினால் 10 சிறந்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது

wpengine

31 Counties Diplomat visited Polannurava Remote areas

wpengine

இந்தியா தன்னுடைய தார்மிக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா?-சிவசக்தி ஆனந்தன்

wpengine