பிரதான செய்திகள்

ஆலய அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கிய வடமாகாண சபை உறுப்பினர் குணசீலன்

வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தனது மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் அடம்பன் காத்தான்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தின் கட்டிடப்பணிக்காக நிதியினை நேற்று (11) காலை வழங்கி வைத்தார்.

அடம்பன் காத்தான்குளம் புனித சூசையப்பர் ஆலயத்திற்கு  ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன் குறித்த ஆலயத்தின் கட்டிடப்பணிக்கான ஒரு தொகுதி நிதியினை ஆலயத்தின் பங்குத்தந்தை வசந்தகுமார் அடிகளாரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் ஆலய சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இடமாற்றங்களோ வேறு நடவடிக்கைகளோ மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது அமைச்சர் றிஷாட்

wpengine

மனைவியினை தாக்கிய கணவன்! விளக்கமறியல்

wpengine

முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும்.

wpengine