Breaking
Sun. Nov 24th, 2024

ஏதேனும் ஒரு பிரதேசத்தில் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த பகுதிக்கு பொறுப்பாகவிருக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று பொலன்னறுவையில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.

ஜுன் மாதம் ஐந்தாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய சுற்றாடல் வாரத்தை பிரகடனப்படுத்துவதற்காக பொலன்னறுவையில் நேற்று முற்பகல் இந்த வைபவம் நடைபெற்றது.

தேசிய சுற்றாடல் வாரத்தின் ஒரு கட்டமாக மர நடுகை திட்டமும் இதன் போது ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது திம்புலாகல கல்வி வலயத்தின் சுற்றாடல் படையணியினருக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

தற்போது கொழும்பு மாவட்டத்தில் குறிப்பாக களனி ஆற்றை அண்மித்த பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. களனி ஆற்றுக்குரிய இரண்டு கரையோரப் பகுதியிலும் 150 மீற்றர் பகுதியில் கட்டடங்கள் நிரம்பிக் காணப்படுகின்றன. அந்த ஆற்றுக்கு சொந்தமான காடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கொலன்னாவ ஆகிய பகுதிகளில் நீர் வடிந்தோடும் ஓடைகள், வடிகான்கள் மீது கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைக்கான பொறுப்பை அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் ஏற்கவேண்டும். ஏதேனும் ஒரு பகுதியில் இயற்கை வளங்களுக்கு பாதிப்பும் ஏற்படும் வகையில் ஆறுகளை அண்மித்த காடுகள், நீரேந்துப் பகுதிகளில் உள்ள காடுகள் பாதிக்கப்படும் வகையில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டால், அவை சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அந்த பிரதேசத்திற்கு பொறுப்பாக உள்ள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *