ஹபீல் எம்.சுஹைர்)
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் றிஷாதின் வாக்குறுதிக்கமைய அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் உணவு நஞ்சாகிய விவகாரத்தில் மரணமடைந்த மூன்று குடும்பந்தாருக்கும் வீடுகளை கட்டுவதற்கான முதல் கட்ட உதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த விடயம் எந்தவொரு செய்தி தளங்களிலும் வந்திருக்கவில்லை. பெரிதாக முக நூற்களிலும் பரவி இருக்கவில்லை.
இதற்கு பிரதான காரணம் அமைச்சர் றிஷாத் அணியினர் இதனை ஒரு பிரதான விடயமாக கருதி இருக்கவில்லை என்பதாகும். வடக்கிலே ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டிக்கொடுத்த அமைச்சர் றிஷாதுக்கு இதுவெல்லாம் சிறிய சேவைகளாக தெரியலாம். ஒரு மலசல கூடத்தை கூட கட்டிக்கொடுக்காத (அம்பாறை மாவட்டத்தின் முக வெற்றிலையான கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள பஸ் தரிப்பு நிலைய மலசல கூடம் சென்று பார்த்தால் மு.காவின் சேவைகள் தெரியும்) மு.கா ஆட்சி செய்த கிழக்கு மாகாணத்தில் மூன்று வீடுகள் கட்டிக்கொடுப்பதானது சாதாரணமாதல்ல.
அதுவும் மு.காவினால் ஏறெடுத்தும் பார்க்கப்படாத இறக்காமப் பிரதேசத்துக்கு சென்று அமைச்சர் றிஷாத் உதவி செய்திருப்பதானது மிகவும் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியதாகும். மாணிக்கமடு சிலை அகற்றல் உட்பட பல வாக்குறுதிகளால் சலிப்படைந்திருக்கும் இறக்காம மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றியுள்ள அமைச்சர் றிஷாதின் அரசியல் செயல்பாடு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.