பிரதான செய்திகள்

ஆனந்தசாகர தேரர் காவியுடையைக் கலைய வேண்டும்

வில்பத்து தேசிய வனப்பிரதேசத்துக்குரிய காணியில் மரம் செடிகளை அழித்து கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்ததாக குற்றம்சாட்டப்படும் அமைச்சர் பாலித ரங்கே பண்டார வனாதவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

இதுதவிர, புக்குளம் கடற்ழெலில் அமைப்பொன்றும் அமைச்சருக்கும் பொது மக்களுக்கும் எதிராக முன்வைக்கப்படும் முறைப்பாடு பொய்யானது எனத் தெரிவித்து முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளதாக வனாதவில்லு பொலிஸார் நேற்று (28) குறிப்பிட்டுள்ளனர்.

தாம் சூழல் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நிரூபிக்க முடியுமாயின் அரசியலிலிருந்து விலகிக் கொள்வதாகவும் அமைச்சர் ரங்கே பண்டார அறிவித்துள்ளார்.

அவ்வாறு நிரூபிக்க தவறின் ஆனந்த சாகர தேரர் தனது காவியுடையைக் கலைய வேண்டும் எனவும் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.

இன்னும் இரு வாரங்களுக்குள் பாஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கும் சூழலியல் அதிகாரிகள் இருவருக்கும் எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

ஜனாதிபதி,பிரதமர் பதவிகளை பெற நூல் சூழ்ச்சி தேவையில்லை

wpengine

மகளின் காதலன் வீட்டுக்குள் புகுந்ததால் உலக்கையால் அடித்துக்கொலை .

Maash

கணவன் அழகில்லை மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

wpengine