பிரதான செய்திகள்

ஆண் விபச்சாரிகள் இணைந்தே நாட்டு சம்பந்தமான தீர்மானங்களை எடுக்கின்றனர்.

றிசார்ட் பதியூதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசியல்வாதிகளின் உதவிகள் இல்லாமல் நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலையும் நடத்தியிருக்க முடியாது என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
வெலிகடை சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை நேற்று சந்தித்த பின்னர் சிறைச்சாலைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த அரசியல்வாதிகள் அனைவரும் பிரதமரின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி பேசியதன் காரணமாகவே நான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டேன். நாட்டில் தற்போது அமைச்சரவையோ நாடாளுமன்றமோ கிடையாது.

பொறுக்கி எடுக்கப்பட்ட கொழும்பு கறுவாத்தோட்டத்தை சேர்ந்த ஆண் விபச்சாரிகள் இணைந்தே நாட்டு சம்பந்தமான தீர்மானங்களை எடுக்கின்றனர். நாட்டை இவர்களே ஆட்சி செய்கின்றனர்.

வெசாக் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அப்படி விடுதலை செய்யாவிட்டால், அதற்கு எதிராக பலத்தை குரலை எழுப்புக் கூடிய அமைப்புகளை உருவாக்குவோம் என விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை பயன்படுத்தி தமக்கு எதிராக அரசியல் ரீதியான சேறுபூசும் பிரசாரங்களை எதிரணி அரசியல்வாதிகள் முன்னெடுத்துள்ளதாக றிசார்ட் பதியூதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related posts

”நான் ஒரு தமிழ் இன துரோகி” சுமந்திரனின் உருவப் பொம்மை

wpengine

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீட்டுத் திட்ட கிராமத்தை உருவாக்கும் ஹிஸ்புல்லாஹ்

wpengine

மன்னாரில் சீரற்ற காலநிலை! 36குடும்பங்கள் பாதிப்பு

wpengine