பிரதான செய்திகள்

ஆசிரியர் தினத்தில் ஓர் ஆரோக்கிய கௌரவிப்பு.

(அஷ்ரப்  ஏ சமத்)

கல்முனை ஸாஹிராக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை இவ்வருடத்துக்கான ஆசிரியர் தின கௌரவிப்பினை வித்தியாசமான முறையில் நடாத்த தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் கற்பித்து ஒய்வு பெற்று கொழும்பில் வாழுகின்ற முன்னாள் ஆசிரியர்கள், அதிபர்களின் வீடுகளுக்கு சென்று, சந்தித்து நலம் விசாரிப்பதுடன் அவர்களுக்கும் அவர்களின் துணைவியாருக்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும், பரிசோதனைகளையும் இலவசமாக செய்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அத்துடன் ஆசிரியா்களுக்கு பரிசுப்பொருள்கள் வழங்கி அவர்களது உண்னத சேவைகளையும் கௌரவிக்க உள்ளனா்.

இந்நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(9) காலையில் டாக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையிலான வைத்திய குழுவினரால் நடாத்தப்படும்.


இக்கல்லுாாியில் கற்று தற்பொழுது கொழும்பில் அரச  வைத்தியசாலைகளில் 30 க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ்  வைத்தியா்கள் கடமையாற்றுகின்றனா்.  இவ் வைத்தியா்கள் சர்வதேச ஆசிரியன தினத்தினை முன்ணிட்டே இத்தினத்தினை செயல்படுத்துகின்றனா்.


பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் டாக்டர்ஸ் போரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வு கொழும்பு வாழ் கல்முனை ஸஹிரியன்ஸ்களை ஒன்றிணைக்கும் எமது பல திட்டங்களில் மற்றுமொரு செயல்வடிவம் என அதன் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.எம். மைசான் தெரிவித்தார்.

Related posts

மட்டக்களப்பு கெம்பஸில் மருத்துவ பீடம் அமைப்பதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை

wpengine

விடுமுறையின் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம்!

Editor

மாவட்ட ரீதியாக உடல்களை அடக்கம் செய்ய இடங்களை தெரிவு செய்யுங்கள்

wpengine