பிரதான செய்திகள்

ஆசிரியர், அதிபர்களுக்கு அரசியல் தேவைகளின் நிமித்தம் இடமாற்றங்கள்

நாட்டின் பல பிரதேசங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தன்னிச்சையான முறையில் இடமாற்றம் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது.

கல்வியமைச்சின் சில அதிகாரிகள், சில மாகாண கல்வி அதிகாரிகள், சில வலய கல்வி அதிகாரிகள் போன்றவர்களினால் அவர்களின் தனிப்பட்ட மற்றும் அரசியல் தேவைகளின் நிமித்தம் இவை இடம் பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க இவ்வாறு கூறுகிறார்.

இதேவேளை அரசியல் அழுத்தங்கள் இன்றி சுமார் 4000 அதிபர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

கல்வி நிர்வாக சேவைக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் கூறியுள்ளார்.

Related posts

இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்

wpengine

தனுஷ்கோடி – தலைமன்னாருக்கு இடையே பாலம் அமைக்க முயற்சி

wpengine

சந்திரிக்கா தலைமையிலான கூட்டணி சஜித்துக்கு ஆதரவு

wpengine