பிரதான செய்திகள்

ஆசிரியர்களின் நிகாப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய ஆசாத் சாலி

நிகாப் அணிந்து கொண்டு சேவைக்கு சென்ற புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தின் 10 ஆசிரியைகளை பாடசாலை அதிபர் திருப்பி அனுப்பியுள்ளதாக மேல் மாகாண ஆளுநரின் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆசிரியைகள் நேற்றைய தினம் பாடசாலைக்கு சென்றபோது,

அவர்கள் உள்ளே நுழைய முடியாதபடி நுழைவு வாசல் மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த ஆசிரியைகள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை சந்தித்து இது சம்பந்தமாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து ஆளுநர் வலய கல்விப் பணிப்பாளரை அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடி, மேல் மாகாணத்தில் ஆசிரியர் பற்றாகுறை நிலவும் வேறு பாடசாலைகளுக்கு, ஆசிரியைகளை இடமாற்றம் செய்துள்ளார்.

Related posts

தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பெற்றவர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் – கல்வி அமைச்சு நடவடிக்கை .

Maash

நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு நாளை

wpengine

18,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் போலீஸ் கான்ஸ்டபுள் கைது .

Maash