பிரதான செய்திகள்

அ.இ.ம.கா.கட்சியின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறி

(ஊடகப்பிரிவு)

பெண்களின் நலன்களைக் காத்து அவர்கள் சொந்தக் காலில் நிற்கக்கூடிய வகையில், பல்வேறு திட்டங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாகவும், இந்த வகையில் முன்பள்ளிகளை அபிவிருத்திச் செய்து, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறிகளை ஆரம்பிக்கும் புதிய திட்டத்தை, தமது கட்சி செயற்படுத்தி வருவதாகவும், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.

கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலையத்துக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிகழ்வு, மருதமுனை அமைப்பாளர் சித்தீக் நதீரின் ஆலோசனையில் மருதமுனை அப்துல் அஸீஸ் முன்பள்ளி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்முனை முன்பள்ளி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி அணீஸ், அட்டாளைச்சேனை பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர் ஏ.ஏ.லத்தீப் உட்பட பலர் பங்கேற்ற இந்த நிகழ்வுக்கு, டாக்டர் எம்.எச்.என்.முனாஸித் தலைமை வகித்தார்.

டாக்டர்.ஹஸ்மியா மேலும் கூறியதாவது,

பெண்களின் வாழ்வில் வசந்தம் வீசுவதற்காக மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் படித்த பெண்களை முன்பள்ளி ஆசிரியர்களாக நியமித்தல், வருமானமற்ற விதவைகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு நாடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சுயதொழில் முயற்சியில் ஈடுபட ஆர்வமுள்ள பெண்களுக்கு உரிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் என்றவாறு இந்தத் திட்டத்தை வகைப்படுத்தி உள்ளோம்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறி செயற்திட்டத்தை அம்பாரை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கின்றோம்.
பெண்களை சொந்தக்காலில் நிற்கும் வகையிலேயே நாம் இந்த அரிய திட்டத்தை செயற்படுத்த விளைந்துள்ளோம். கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை கல்வி வலையங்களை உள்ளடக்கிய பொத்துவில், அக்கரைப்பற்று, ஒலுவில், பாலமுனை மற்றும் நிந்தாவூர் பிரதேசங்களில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கல்விச் சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென டாக்டர் ஹஸ்மியா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியைகள் பங்குபற்றி இருந்தனர்.

Related posts

வை.எல்.எஸ் ஹமீத் சிந்திப்பாரா?

wpengine

விவசாய அமைச்சருக்கு எதிராக வட மாகாண முதலமைச்சர் முறைப்பாடு

wpengine

மஸ்தானுக்கு பிரதி அமைச்சு! இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல்

wpengine