பிரதான செய்திகள்

அஹதிய்யா பாடசாலைகள் மத்திய சம்மேளனத்தின் பேராளர் மாநாடு.

கரீம். ஏ. மிஸ்காத்,புத்தளம்

அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின்  பேராளர் மாநாடு நேற்று (2022/01/08)கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள ( MICH Marudanai) எம்.ஐ.சி.எச். மண்டபத்தில்   நடைபெற்றது.


 இம்மாநாமாநாட்டிற்கு அகில இலங்கைரீதியாக அஹதிய்யா பாடசாலைகளில்  ஒருவர் வீதம் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், நிருவாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.


 2022ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது.  2022 -2025 வரையான நடப்பாண்டு நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.


அல்ஹாஜ் எம்.ஆர்..எம். ஸரூக் ( தலைவர்)
எம் .எப்.எம்.பாஹிம் ( பொதுச் செயலாளர்)
அல்ஹாஜ்எம்.எச் .எம் உவைன் ( பொருளாளர்)
  உப தலைவர்களாக
1) பாறூக் பதீன் (ஆசிரியர், வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்)
2) அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அஸ்வர்

3) அஷ்ஷேஹ் எம்.எம்.றபியுத்தீன்
எஸ்.எம்.ஹிஷாம் ( உப செயலாளர்)
அஷ்ஷேஹ் எம். அக்ரம் ஜுனைத்( உப பொருளாளர்)
 அல்ஹாஜ் கலாநிதி பி.எம்.பாறூக்( கணக்காய்வாளர் )
 ஆகியோர்  தெரிவு செய்யப்பட்டனர். 


மேலும் இந்நிகழ்வுக்குபிரதம பேச்சாளராக  ஜாமிஆ நளீமியா கலாபீட பிரதிப் பணிப்பாளர், விரிவுரையாளர் அஷ்ஷேஹ் எம். எச்.எம். பளீல், விஷேட அதிதிகளாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி றுஷ்தி ஹபீப், மற்றும் சட்டத்தரணி றூமி  , முன்னால் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் நூருல் அமீன் மெளலவி , எம்.எம்.முஹம்மட் (முன்னால் பரீட்சை ஆணையாளர்) இலங்கை பரீட்சை திணைக்களம், அஷ்ஷேஹ் எம்.எம்.ஏ.லாபிர், ஸப்பான் ஏ. அஸீஸ் மற்றும்  முன்னால் மத்திய சம்மேளனத்தின் உறுப்பினர்கள்  ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

வாகன வருமான அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான அறிவிப்பு!

Editor

முஸ்லிம்களுக்கு பதிலடி கொடுக்கவே நான் போட்டியிடுகின்றேன் கருணா

wpengine

பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு

wpengine