பிரதான செய்திகள்

‘அஸ்வெசும’ திட்ட மேல்முறையீட்டுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

‘அஸ்வெசும’ சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டம் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைகின்றது.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் இணையம் மூலமாகவும் நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பில் இதுவரை 815,000 மேல்முறையீடுகளும் 11,000 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

‘அஸ்வெசும’ திட்டம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விசாரணைகளுக்கு, பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘ஏற்றுமதி அதிகரிப்பு’ பிரதம அதிதியாக அமைச்சர் றிசாட் (படம்)

wpengine

நல்லாட்சியில் முஸ்லிம்களின் காணிகள் விடுவிக்கப்படாமை ஏமாற்றம் அளிக்கிறது: உதுமாலெப்பை

wpengine

வடகொரியாவில் 15 கப்பல்களில் அழுகிய நிலையில் சடலங்கள்

wpengine