மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஷ்ரப் அவா்கள் அமைச்சராக இருந்த சமயத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பணியாற்றிய அதிகாரி ஜனாப் – பாருக் நீதி,நியாயம் இல்லாமலும் எதிா்கட்சி அரசியல் வாதிகளிடம் பணம் பெற்று அவா்களுக்கு தலைச்சாய்த்தும் அமைச்சர் அஸ்ரபுக்கு எதிராகவும் அத்துடன் பொலிஸ் நிலையத்தில் பக்க சாா்பாகவும் செயல்பட்டாா்.
அது மட்டுமல்லாமல் அமைச்சரின் கட்சி சாா்பாணவா்களை வேண்டுமென்றே குற்றம் சுமத்தி கூண்டில் அடைத்தாா்.அத்துடன் அன்று நடைபெற இருந்த அமைச்ச்ரின் கூட்டத்திற்கும் அனுமதி, லவுஸ் ஸ்பீக்கா் உள்ளுர் அறிவிப்பு போன்றவற்றுக்கு பொலிஸ் அனுமதியை தருவதற்கும் இழுத்தடித்தாா். இவ் விடயம் மறைந்த தலைவருக்கு எத்தி வைக்கபட்டது. அப்போதைய காலகட்டத்தில் மயோன் முஸ்தாபவும் பாராளுமன்ற உறுப்பினராக கல்முனையில் கடமையாற்றினாா்.
சாய்ந்தமருதுாருக்கு தனியானதொரு பிரதேச செயலகம் உருவாக்கி அதனை திறந்து வைக்கும் வைபவம். அன்று சாய்ந்தமருது மக்களால் ஒழுங்கு செய்யபட்டிருந்தது. அதற்காக பள்ளிவாசல் முன் மேடையும் போடப்பட்டிருந்தது.
மறைந்த அஸ்ரப் அவா்கள் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளி வாசல் முன் எதிரே போடப்பட்டிருந்த மைக்கை பிடித்து இரவு 9 மணிக்கு தன் முன் சலுட் அடித்த அந்த பொலிஸ் அதிகாரியை ஆங்கிலத்தி பிரேயோகித்த வசனம். இன்னும் எனக்கு ஞாபகம் உள்ளது. அவா் உடன் மைக்கை பிடித்தவாரே கையடக்க தொலைபேசி மூலம் இந்த பொலிஸ் அதிகாரி பற்றி அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவுக்கு அறிவித்தாா். அடுத்த கனமே அந்த அதிகாரிக்கு அவரது வோக்கி டோக்கி ஊடாக உடன் தலைமைக் காரியாலயத்திற்கு வரும்படி அறிவித்தல் வந்தது.
அந்த பொலிஸ் அதிகாரி தனது உடுப்பு பெட்டியாவது மற்றும் பொருட்களைாயும் கல்முனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று எடுத்துக் கொண்டு செல்லக் கூட அனுமதி கேட்டாா். தலைவா் நோ நோ நவ் ஒன் த ஸ்போட் யு கோ எவே புரம் கிய” என்று சொல்லி கல்முனை நிலையத்திறகுக் கூடச் செல்ல அனுமதியை மருத்தாா்.
அமைச்சா் அஸ்ரப் இவ் சம்பாசனையை தன் முன்னால் இருந்து மைக்கை பிடித்தவாரே பகிரங்காகமாகச் சொன்னாா். ” நோ, நோ் கெட் லொஸட் . நோ யு கெவ நோ சின்சீியுரிட்டி, யு ஆர் ்மிஸ் யுசிங் யுவா் சேவிஸ் , ஜ டோன் வோன்ட் யு அர சேவிஸ் ரு மை கொமினியுட்டி, என்ட் மை இலக்ரோட், யு ஆர் பிரைபர் கெட் அவுட் புரம் கியா் ”
அவ்விடத்தில் இருந்த உதவி பொலிஸ் அதிகாரியிடம் அந்த அதிகாரி அந்த மேடைக்கு முன் தலைவா் எதிரே அந்த அதிகாரியிடமும் பாரம் கொடுத்து விட்டு அந்த பொலிஸ் ஜீப்லியே இரவு 9 மணிக்கு அம்பாறை பஸ் நிலையத்தில் விட்டு வரும்படியும் தலைவா் பதில் பொலிஸ் அதிகாரியைப் பணித்தாா். அப்போது பயங்கரவாதிகள்து காலம். அந்த அதிகாரி அம்பாறை பஸ் நிலையத்திலேயே அன்றைய இரவை கழித்து விட்டு அடுத்த நாள் அம்பாறையில் ்இருந்து ஒரு காரை அனுப்பி தமது பொருட்களையும் மனைவி பிள்ளைகளையும் அம்பாறைக்கு அழைத்துக“ கொண்டு கொழும்புக்கு பொலிஸ் தலைமைக்காரியாலயம் சென்று கடமையேற்றாா்.
இதே மாதிரியாகத்தான் அக்கரைப்பற்று பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய மா்ஹூம் ஜமால்தீன்க்கும் தலைவா் அஸ்ரப் ஒரு பக்கச் சாா்பாக நடந்ததை அறிந்து கொழும்பு தலைமையகத்திற்கு மாற்றினாா்.
இவ்வாறு தலைவர் பாதுகாப்பு படையினா் பக்கச் சாா்பாக நீதி, நியாயம் இல்லாதவா்களுக்கு பாடம் புகட்டினாா் அவா் தனது மக்களுக்கு தனக்கு கீழ் உள்ள அரசியல் பிரநிதிதகளுக்கு அந்த அதிகாரிகள் பக்க சாா்பாக நடந்தல் மதிக்காமல் விட்டால் அவா் அந்த அதிகாரிகளுக்கு எதிராக சிறந்த பாடம் புகட்டினாா்.