பிரதான செய்திகள்

அஸ்கிரிய மகாநாயக்கர் பதவிக்கும் கடும் போட்டி! இரண்டு துணை மகாநாயக்கர்கள் களத்தில் குதிப்பு!

வெற்றிடமாகவுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்கர் பதவியைப் பெற்றுக் கொள்ள இரண்டு துணை மகாநாயக்கர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கராக இருந்த கலகம அத்ததஸ்ஸி தேரர் அண்மையில் காலம் சென்றிருந்தார். இதனையடுத்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் பதவி காலியாக உள்ளது.

இதற்கான பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 07ம் திகதி அஸ்கிரிய பீடத்தின் பிரதான விகாரையில் நடைபெறவுள்ளது.

தற்போதைக்கு அஸ்கிரிய பீடத்தின் இரண்டு துணை மகாநாயக்கர்களாக பதுளை முதியங்கன விகாராதிபதி மற்றும் பொலனறுவை பன்னிரண்டு தலங்களின் விகாராதிபதிகள் கடமையாற்றுகின்றனர்.

இந்நிலையில் முதியங்கன விகாராதிபதி வரகாகொட ஞானரத்ன தேரர் மற்றும் பொலன்னறுவை பன்னிரண்டு தலங்களின் விகாராதிபதி வெண்டருவே உபாலி தேரரும் மகாநாயக்கர் பதவிக்கான போட்டியில் குதித்துள்ளனர்.

இது தொடர்பாக அஸ்கிரிய பீடத்தின் செயற்குழு மற்றும் தேரர்கள் சபைக்கும் அவர்கள் முறையாக அறிவித்துள்ளனர்.

மகாநாயக்கர் பதவிக்கான போட்டி காரணமாக அஸ்கிரிய பீடத்தில் தற்போது சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

சிலாவத்துறை வைத்தியசாலை சிறுவர் நோயாளர் விடுதியினை திறந்து வைத்த வடமாகாண சுகாதார அமைச்சர்

wpengine

வடக்கு கிழக்கில் மனோ இல்லை! கொழும்பில் கூட்டமைப்பு அவுட்

wpengine

வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவு!

Editor