பிரதான செய்திகள்

அஸ்கிரிய பீடம் கண்டனம்! வட,கிழக்கில் இடம்பெறும் காடழிப்பை ஜனாதிபதி தடுக்க வேண்டும்

தேரர்களை அவமதிக்கும் வகையில், சில தரப்பினர் வெளியிடும் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகள் தொடர்பில் அஸ்கிரிய பீடம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் தலைமையில் பீடத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர், கலகொட அத்தே ஞானசார தேரரின் சில செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டினார்

ஞானசார தேரரின் ஆக்ரோஷமான நடவடடிக்கைகளை எந்த வகையிலும் அனுமதிக்காத போதிலும், தேரரின் நிலைப்பாட்டை புறந்தள்ளவில்லை என அஸ்கிரிய பீடம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இடதுசாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் சிலரும், மேலும் சில தரப்பினரும் ஞானசார தேரரின் பெயரை மாத்திரம் கூறி கருத்து வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் தெரிவித்தார்.

சிரேஷ்ட பிக்கு ஒருவர் மாத்திரமே மற்றுமொரு பிக்குவை பெயரைக் கூறி அழைக்க முடியும் என அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் அறிவித்தார்.

இலங்கையில் பௌத்த மற்றும் சிங்கள மக்களை இலக்காகக் கொண்டு இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படல் வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழலில் மகா சங்கத்தினர் தொடர்ந்தும் அமைதிகாக்க முடியாதுள்ளதாகவும் அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் காடழிப்பு மற்றும் தொல்பொருள் அழிப்பைத் தடுப்பதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும் எனவும் மெதகம தம்மானந்த தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம் – SriLakan President Anurakumara DIssanayaka

Editor

ஞானசார தேரரின் செயலணியில் இருந்து அஸீஸ் நிசாருதீன் விலகினார்.

wpengine

பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம்

wpengine