பிரதான செய்திகள்

அஷ்ரப் மரணத்தின் புலனாய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு பஷீர் விண்ணப்பம்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக புலனாய்வு செய்து அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்ட தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியைத் தமக்கு வழங்குமாறு, கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பித்துள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் குறித்த பிரதியை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பீ. அபேகோனிடம் அவர் விண்ணப்பம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்த விண்ணப்பம் குறித்து முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் கையொப்பத்துடன் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்துமாறு ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தாம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மூன்று மாதங்களுக்குள் புலன் விசாரணை நடத்தி, அதன் கண்டறிதல்களை முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாகவும் பஷீர் சேகுதாவூதினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் குறித்த அறிக்கையின் கண்டறிதல்கள் தொடர்பிலான விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என பஷீர் சேகுதாவூத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு பழைய விலையில்

wpengine

அணு ஆயுத ஒப்பந்தம்! 60நாற்களில் ஈரானுக்கு பொருளாதார தடை

wpengine

தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராட்டம்!

Editor