பிரதான செய்திகள்

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் – வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவினர் சந்திப்பு

(SHM Wajith)
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினருக்கும், வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு அடம்பன் பள்ளிவாசல் பிட்டியில் அமைந்துள்ள முஸ்ஸிம் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நடைபெற்றது.

மன்னாரிற்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயத்தை மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் அடம்பன் பள்ளிவாசல் பிட்டியில் அமைந்துள்ள முஸ்ஸிம் பிரஜைகள் குழு அலுவலகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.australia_muslim_006

வடமாகாண முஸ்ஸிம் பிரஜைகள் குழுவின் தலைவர் அஸ்ரப் முபாரக் ரசாபீ மௌலவி உட்பட பிரஜைகள் குழுவின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.d0f754db-28e5-4a94-a6e2-93cddad288ed

இதன்போது வடமாகாண முஸ்ஸிம்களின் மீள் குடியேற்றம், சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையினை கட்டியெழுப்புதல், இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகின்ற போது வடமாகாண முஸ்ஸிம்களுக்கு உரிய இடம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து ஆரயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.australia_muslim_001

Related posts

விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

wpengine

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கவே! ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

wpengine

அரசியல்வாதிகளை தொடர்ச்சியாக விமர்சிப்பதையே சிவில் அமைப்புக்களில் சில தொழிலாக்கியுள்ளன-அமைச்சர் ரிஷாட்

wpengine