பிரதான செய்திகள்

அழிவுச் சத்தியம் பண்ண வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுக்கிறேன்.

தலைவர் ரவுப் ஹகீம் அவர்களின் சகோதரர் ரவுப் ஹசீர் அவர்களுக்கு சமர்ப்பணம்.

“கவிதைக்கு பொய் அழகு” என்பார்கள். அதுபோல் “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடலும் உள்ளது.

பொய் இல்லாவிட்டால் கவிதை இல்லை. பெரும்பாலான கவிஞர்கள் கவிதையில் மட்டுமே பொய் சொல்லுவார்கள். ஆனால் எங்கள் ஆஸ்தான கவிஞர் சகோதரர் ரவுப் ஹசீர் அவர்கள் கவிதையுடன் நின்றுவிடாமல், வாழ்க்கையிலும் பொய் கூறுவதில் அவருக்கு நிகர் அவரே என்பது சகோதரரின் பதிவுகளில் உள்ள கற்பனை தடுமாற்றத்தில் தெரிகிறது.

கட்சிக்காகவும், தலைவருக்காகவும் எங்களது பணத்தையும், நேர காலத்தையும் வீண்விரயம் செய்து செயல்பட்டுவந்த போராளிகள் குழுமத்தை செயலிழக்க செய்வதில் சகோதரர் ரவுப் ஹசீர் காட்டிய நரித்தனத்தையும், பிரித்தாளும் தந்திரத்தையும் வேறு ஒரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

அத்தோடு அவரது பதிவில் கூறப்பட்டுள்ள கவிதைகள் அனைத்துக்கும் ஒரே தடவையில் பதில் எழுதுவதென்றால் அது மிகவும் நீண்டுவிடும். அதனால் வெவ்வேறாக பதிவிடுகிறேன்.

இப்போது விடயத்துக்கு வருகிறேன்.

எங்களை யாரோ விலைக்கு வாங்கியதாக சகோதரர் கூறியுள்ளார். அதாவது ““உள்ளே இருந்துகொண்டே உண்மைக்காக போராடுகிறோம் என்ற சுலோகத்தோடு தங்களை விலைக்கு வாங்கியவர்களுக்கு விசிறிவீச தொடங்கிவிட்டார்கள்”” என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது எங்களது நியாயமான கருத்துக்கள் எதுவும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளிடம் எடுபடக்கூடாது என்பதற்காக, நாங்கள் விலை போனவர்கள் என்றும், உள்ளே இருந்துகொண்டு குழி பறிக்கிறோம் என்பதுதான் சகோதரர் ரவுப் ஹசீரின் கவிதையாகும்.

நாங்கள் கடந்த காலங்களிலோ அல்லது நிகழ் காலங்களிலோ எவருக்கும் விலை போனவர்கள் அல்ல என்பதனை அல்லாஹ்மீது ஆணையிட்டு முதலில் இங்கே பதிவிடுகிறேன்.

இப்போது சகோதரர் ரவுப் ஹசீரிடம் கோருகிறேன்.

நங்கள் யாரிடம் விலை போனது ? விலை போனது உங்களுக்கு தெரிந்திருக்கும்போது, அது யாரிடம் விலை போனோம் என்பது நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். அது யாரென்று பகிரங்கமாக கூறுங்கள்.

அவ்வாறு அது யாரென்று தெரியாவிட்டால், நாங்கள் நிச்சயமாக விலைபோனோம் என்று அல்லாஹ்மீது ஆணையிட்டு கூறுங்கள். அழிவுச் சத்தியம் பண்ண வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுக்கிறேன். சாட்டுப்போக்கு கூறக்கூடாது.

உங்களது நரித்தந்திர அரசியல் எனிடம் பலிக்காது.

“நேர்மையே எனது பலம்” .

முகம்மத் இக்பால்

Related posts

ரணிலுடன் மோதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி

wpengine

மாகாண சுகாதார அமைச்சருக்கு அறிவித்தல் இல்லை! சபையில் குழப்பநிலை

wpengine

நெல்,மரக்கறி இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

wpengine