”அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் இருந்தாலும், அவை அன்பை மட்டுமே போதிக்கின்றன; வன்முறையை அல்ல,” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் வேர்ல்ட் சூபி பாரம் சூபி சாமியார்கள் மாநாடு நடைபெறுகிறது.
மார்ச் 17 தொடங்கி, 20ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் 20 நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய பண்டிதர்கள்,கல்வியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
புனித குர்ஆன் மத நல்லிணக்கத்தை மட்டுமே வலியுறுத்தி வருகிறது. இந்தியா மத நல்லிணக்கத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ளது. இந்தியா என்பது அனைத்து சிறுபான்மை இனத்தவர்களின் ஐக்கியமாகும். இங்கு பல மதத்தினருக்கும் இடம் உண்டு.
அல்லாஹ்வுக்கு, 99 பெயர்கள் இருந்தாலும்; அவை அன்பை மட்டுமே போதிக்கின்றன. ஒரு இடத்தில் கூட வன்முறை பெயரை அர்த்தப்படுத்தவில்லை.
ஆனால், பயங்கரவாதிகள் அல்லாஹ்வின் பெயரால், சொந்த நாட்டில், அவர்களின் சொந்த மக்களை கொன்று குவித்து வருகின்றனர். அந்த பயங்கரவாதிகளை அழிக்க உண்மையால் மட்டுமே முடியும். பயங்கரவாதத்தை ராணுவத்தால் மட்டும் அழிக்க முடியாது. அறிவாற்றல், தூதரக நடவடிக்கை மூலம் தான், அழிக்க முடியும் என மோடி பேசுவது மல்லையா மேட்டரையும் பாரத் மாதா மேட்டரையும் மூடி மறைக்கவே என அறிவாளிக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.