செய்திகள்பிரதான செய்திகள்

அறிவியல் வினாத்தாள் – சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் போலியானவை.!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர அறிவியல் தேர்வு வினாத்தாள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் போலியானவை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

“இந்த முறை பாடத்திட்டத்தைத் தாண்டி வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தீர்வாக, அறிவியல் பாடத்திற்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் கூடுதலாக 08 மதிப்பெண்கள் வழங்கப்படும், 

மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண் அளவுகள் 10 மதிப்பெண்களால் குறைக்கப்படும். 65 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் அனைவருக்கும் சிறந்த தேர்ச்சி வழங்கப்படும்.” என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த செய்தி போலியாக தயாரிக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நால்வர் தப்பியோட்டம்

Maash

ராஜபக்ஸ குடும்பத்தை பாதுகாக்கும் பாதுகாப்புப் பிரதானி!நியமிக்கப்பட்டு, அரசியல் சூதாட்டம்.

wpengine

சட்டமா அதிபரின் பிராந்திய இல்லம் தலைமன்னார் வீதியில்

wpengine