பிரதான செய்திகள்

அறிவித்தல் இன்றி மின்சார தடை! முசலி மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் இன்று அறிவித்தல் இல்லாத மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக முசலி பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முசலி பிரதேசத்தில் உள்ள கரையோர பகுதியான அரிப்பு,சவேரியார்புரம்,வெள்ளிமலை,சிலாவத்துறை போன்ற பல இடங்களிளும் முசலி பிரதேசத்தில் உள்ள அரச திணைக்களங்களிலும் மின்சாரம் தடைபெற்றதன் காரணமாக பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள  இலங்கை மின்சார சபை அதிகாரிகளின் அசெளமந்த போக்கின் காரணமாகவே! இப்படியான பிரச்சினைகளுக்கு முசலி பிரதேச மக்கள் முகம்கொடுக்க வேண்டி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பாவனையாளர்களின் செளசரியங்களை குறைத்துக்கொள்ளும் நோக்குடன் மின்னார சபை ஊழியர்,அதிகாரிகள் மக்களுக்கு தெரியப்படுத்தி மின்சார திருத்த வேலைகளை செய்யுமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.unnamed-3

Related posts

களனி புதிய பாலத்தில் எரிந்த கார்!

Editor

வாழைச்சேனை அல் ஹக் விளையாட்டுக் கழகத்தின் இப்தார்

wpengine

18 வீதமான நிதியினை மட்டும் செலவு செய்ய வடமாகாண சபை! கல்வி சமுகம் விசனம்

wpengine