பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைத்துக் கொண்டிருக்கும் வை.எல்.எஸ்.ஹமீட்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் செயலாளர் வை. எல். எஸ். ஹமீட், மக்கள் காங்கிரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டு தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களை பிழையாக வழி நடாத்தி வருவதாக அக்கட்சியின் உறுப்பினர் அப்துல் பாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி குருநாகல் பேராளர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் புதிய யாப்புக்கு இணங்க தெரிவு செய்யப்பட்ட பதவி நிலை உத்தியோகத்தர்களைத்தவிர வேறு எந்தத்தனி நபரும் வெளியிலிருந்து கொண்டு கட்சியின் பதவிகளுக்கு உரிமை கோர முடியாதெனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் அனைத்து பாகங்களிலும் இருந்து கலந்து கொண்ட சுமார் 1000 க்கு மேற்பட்ட பேராளர்கள், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், எம்.பிக்களினால் குருநாகல் பேராளர் மாநாட்டிலே கட்சியின் புதிய யாப்பு அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் அங்கு முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டதுடன் பதவி நிலை உத்தியோகத்தர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

குருநாகல் பேராளர் மாநாடு போலியானதென வை. எல். எஸ். ஹமீட் அடிக்கடி தமது அறிக்கைகள் மூலம் தெரிவித்து வருகின்றார். முறைப்படி நடந்த பேராளர் மாநாட்டை இவ்வாறு கூறுவதன் மூலம் அவர் தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய செயலாளரான என்னை, செயலாளராக இயங்குவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடுத்திருந்தார். (வழக்கு இலக்கம் DSP – 5 – 16). எனினும் நீதி மன்றம் மனுதாரரான ஹமீதின் கோரிக்கைக்கிணங்க தடையுத்தரவை வழங்கவில்லை.

கட்சியின் செயலாளராக சுபைர்தீனே தொடர்ந்தும் இயங்கி வருகின்றார் என்பதை அவர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எனினும் கட்சியின் செயலாளர் தானே என இன்னும் வை.எல்.எஸ் ஹமீட் உரிமை கோரி வருவது அவரது வரட்டு கௌரவத்தையே எடுத்துக்காட்டுகின்றது.

அத்துடன் புதிய யாப்பின் படி அரசியல் அதிகார சபையே (POLITICAL AUTHORITY) கட்சியின் உச்சபீடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் முன்னாள் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் இன்னும் தனது காலத்தில் உள்ள உயர் பீடம் (HIGH COMMAND) பற்றியே கதையளந்து வருகின்றார். புகையிரதம் சென்று மூன்று நாட்களின் பின்னரும் புகையிரத நிலையத்தில் துhங்கிக் கொண்டிருப்பவனின்  நிலையிலேயே  இன்னும் வை.எல்.எஸ் இருப்பது வேதனையானது.

இவர் செயலாளராக பதவிவகித்த போது தலைவருக்குத் தெரியாமல் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளமை இப்போது படிப்படியாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. கட்சியின் அப்போதைய உயர் பீடத்தில் தனக்குப் பலம் சேர்க்க தனது உறவினர்கள் சிலரை இணைத்து தலைவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். அத்துடன் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்ற கடிதத் தலைப்புகளில் தன்னிச்சையாக தான் விரும்பியவர்களுக்கும் தனது புகழ் பாடுபவர்களுக்கும் கட்சி தொடர்பான பல்வேறு பதவிகளை வழங்கி இருக்கிறார் என்ற விடயங்களும் படிப்படியாக அம்பலத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

2014 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி D/E/P/1/4/3/3 என்ற வர்த்தமானி பிரகடனத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக தேர்கல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டமையை இந்த இடத்தில் வை.எல்.எஸ் இற்கு நான் நினைவூட்ட விரும்புகின்றே. இருந்த போதும் அவர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சிந்தனையிலேயே இன்னும் இருப்பது அவரது அறியாமையை வெளிப்படுத்துகின்றது.

தேசியப் பட்டியல் மூலம் எம்.பியாகும் எண்ணம் தவிடு பொடியாகியதால் இப்போது விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு கட்சியையும் தலைவரையும் இழிவுபடுத்துவதற்கு அவர் எந்தப் பேயுடனும் சேர்ந்து பணிபுரிய இப்போது தயாராகி விட்டார் என்பதையே அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இறுதியாக வை. எல். எஸ் இற்கு நான் ஒன்று கூற விரும்புகின்றேன். “செவி செவிடாகிய பின்னர் அதன் பின் வந்த கொம்போ அல்லது வேறு எதுவோ அந்தச் செவியை மறைத்தாலும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் பாரி

முன்னாள் நகரசபை உறுப்பினர்

வன்னி மாவட்ட மத்திய குழு உறுப்பினர்

Related posts

யானை சின்னல் எதிர்வரும் பொதுத்தேர்தலில்!

wpengine

ரணிலுக்கு ஆதரவு றிஷாட்,ஹக்கீம் ஐ.தே.க தெரிவிப்பு

wpengine

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த முன்னால் ஜனாதிபதி

wpengine