பிரதான செய்திகள்

அரிசி பதுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டால்! கடுமையான சட்ட நடவடிக்கை-அமைச்சர் றிஷாட்

அரிசி இறக்குமதி தொடர்பில் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.

அரிசி குறிப்பிட்ட தொகையில் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும்.

இவ்வாறு இறக்குமதி செய்யும் போதிலே உரிய விலையில் அதனை நுகர்வோருக்கு வழங்க முடியும்.

போதுமான அளவு அரிசி இருக்குமாயின் அரசாங்கம் ஒருபோதும் இறக்குமதிக்கு அனுமதி வழங்காது.

இதுபோல் சிலர் அரிசியினை பதுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டால், அதுகுறித்து 1977 என்ற நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவித்தால் அவர்களுக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் எச்சரிக்கை விடுத்தார்.

Related posts

பன்ங்கோர் சர்வதேச அபிவிருத்தி கலந்துறையாடல் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் இலங்கை சார்பில் பங்கேற்பு

wpengine

மன்னாரில் கடும் மழை! நானாட்டான் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

wpengine

அமைச்சர் இலஞ்சம்! ஜனாதிபதி ரணில் குழு நியமனம்

wpengine