Breaking
Mon. Nov 25th, 2024

அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய் மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? மற்றும் பொருள் விலையும்,வரிச் சுமையும், கடன்களும்,பில்லுகளும் தாங்க முடியவில்லை. சம்பளத்தினை கூட்டு என்ற வாசகத்தினை தாங்கிய சுவரொட்டிகள் வவுனியாவில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுவரொட்டிகள் சோஷலிஸக் கட்சியினரால் வவுனியா நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ், சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே ஒட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சுவரோட்டிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் கருத்து தெரிவிக்கையில்,
இந்த விலைவாசி ஏற்றமானது தற்போது எல்லையற்று அதிகரித்து காணப்படுகின்றது. அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட மத்திய வர்க்கத்தினையும் அரசாங்கத்தினையும் மிக பாதித்துள்ளது.

உண்மையிலேயே நல்லாட்சி வந்த பிற்பாடு இந்த பொருட்களின் விலையேற்றம் மிக கடுமையாக காணப்படுகின்றது.
உண்மையிலேயே தேங்காயின் விலை அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்களும் சரி, ஏழை மக்களும் சரி இந்த தேங்காய் உணவு பொருட்களில் அத்தியவசியமான ஒன்றாக காணப்படுகின்றது.

அரிசியும் தேங்காயும் தான் கஞ்சி விற்று குடிப்பதாகவிருந்தாலும் அரிசியும் தேங்காயும் தான் தேவைப்படுகின்றது. அதுக்கு கூட வழியில்லாமல் செய்துள்ளது இந்த நல்லாட்சி அரசாங்கம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.

உண்மையிலேயே அரசாங்க ஊழியர்களின் சம்பளம் போதாமல் உள்ளது. சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.கூலித்தொழிலாளிகளுக்கு கூலி அதிகரிக்கப்பட வேண்டும்.
அத்தியவாசிய பொருட்கள் கட்டுப்பாடான விலை நிர்ணயத்துடன் விற்பனை செய்யப்பட வேண்டும்.
மக்களுக்கு சிரமமில்லாமல் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் வழி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *