பிரதான செய்திகள்

அரிசிக்கு அடுத்த வாரம் கட்டுபாட்டு! வணிகத்துறை அமைச்சு

அரிசிக்காக அடுத்த வாரம் முதல் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படவுள்ளது.

வணிகத்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

தனியார் துறையினர், அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்காதுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில் கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தின்போது இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டரிசி ஒரு கிலோ 74 ரூபாவாகவும், சுதேச சம்பா ஒருகிலோ 85 ரூபாவாகவும் அதிகூடிய சில்லைறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் வெள்ளையரிசி ஒருகிலோ 65 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் துறையினர் அதனை மீறி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related posts

துரியன் தோட்டத்திற்கு வந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு..!!!

Maash

கற்பிட்டிய பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு

wpengine

பிறைந்துறைச்சேனை மக்களால் அமீர் அலிக்கு ஆதரவு பிரச்சாரம்

wpengine