கட்டுரைகள்பிரதான செய்திகள்

அரபு வசந்தமும், அதனை அமெரிக்கா கையாண்டமையும், ஐ.எஸ் பயங்கரவாதமும்.

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது

ஒருபுறம் மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தம் என்னும் மக்கள் புரட்சியும், மறுபுறம் ஐ.எஸ் இயக்கத்தின் எழுச்சியும் மன்னர் ஆட்சி நிலவுகின்ற முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை நின்மதியிழக்க செய்தது.

சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் பெரும் நிலப்பரப்புக்களை கைப்பேற்றி அதனை “இஸ்லாமிய தேசம்” என்று பிரகடனம் செய்து ஐ.எஸ் இயக்கத்தினர் ஆட்சி செய்து வந்தனர். இதனால் உலகில் உள்ள முஸ்லிம் மக்களிடத்தில் ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆதரவு அதிகரித்ததுடன், பல நாடுகளிலுமிருந்து ஏராளமானவர்கள் அவ்வியக்கத்தில் ஆர்வத்துடன் இணைந்தது கொண்டார்கள்.

2010 டிசம்பர் மாதம் துநீசியா நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அரபு வசந்தம் வெற்றியளித்ததுடன், அமெரிக்காவின் பொம்மையாக செயல்பட்டு வந்த ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முர்சி அவர்கள் எகிப்தின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியானார். 

அதனைத் தொடர்ந்து லிபியா, யேமன், சிரியா உற்பட மத்தியகிழக்கின் பெரும்பாலான நாடுகளில் அரபு வசந்தத்தின் தாக்கம் ஏற்பட்டது. இதனால் தனது நாட்டிலும் இவ்வாறான புரட்சி ஏற்படாமல் தடுக்கும்பொருட்டு சவூதி அரேபிய அரச குடும்பம் இறுக்கமான சில கட்டுப்பாடுகளை தளர்த்தி, மக்களுக்கான பல சலுகை திட்டங்களை அறிவிப்பு செய்தது.  

அரபு வசந்தத்தின் வெற்றியினால் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் நண்பர்கள் ஆட்சியை இழந்தனர். இதனால் இவ்விரு நாடுகளுக்கும் வர்த்தக சுரண்டல்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டதோடு, குறிப்பிட்ட நாடுகளில் தங்களது செல்வாக்கினை செலுத்த முடியவில்லை. இதனால் இந்த புரட்சியை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதில் மொசாட்டும், CIA யும் தீவிர கவனம் செலுத்தியது.  

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எகிப்திய ஜனாதிபதி முர்சி அவர்களின் ஆட்சி நீடிக்கவில்லை. அமெரிக்காவின் கூலிப்படையான அந்த நாட்டு இராணுவத்தினால் ஆட்சிகவிழ்க்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

எகிப்து இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தியபோது அதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் கொல்லப்பட்டனர்.   

ஜனநாயகத்தையும், நீதியையும் வேண்டி மக்களால் நடாத்தப்பட்ட அரபு வசந்தம் என்னும் எழுட்சி போராட்டம் இறுதியில் அமெரிக்காவினதும், யூதர்களினதும் சூழ்ச்சி வலையில் வீழ்ந்தது.

தான் விரும்புகின்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக இந்த அரபு வசந்தத்தை அமெரிக்கா பாவித்தது. அதற்காக அந்தந்த நாடுகளிலுள்ள பல கிளர்ச்சிக் குளுக்களுக்கும், கூலிப்படைகளுக்கும் ஆயுதங்களையும் பணத்தையும் அமெரிக்கா அள்ளி வழங்கியது.

அரபு வசந்தத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அமெரிக்காவினால் ஐ.எஸ் இயக்கத்தின் எழுட்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களது உறுதியான கொள்கையும், வீரியமான போராட்டமும், மக்கள் செல்வாக்கும்தான் இதற்கான காரணமாகும்.    

ஐ.எஸ் இயக்கம் பற்றியும் அதன் தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி பற்றியும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்தது. அவர்கள் யூதர்களின் ஏவல்கள் என்று ஒரு தரப்பினரும், அவர்கள் இஸ்லாமிய தௌஹீத் வாதிகள் என்று வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இந்த இரண்டு முரண்பாடான கருத்துக்களை பற்றியும் விரிவாக ஆய்வு செய்தபோதுதான் அதில் புதைந்துள்ள உண்மை நிலையை அறிய முடிந்தது.

முதலில் அதன் தலைவர் அபூபக்கர் அல்-பக்தாதி பற்றிய தகவலை தேடியபோது அவர் ஈராக்கின் “ஸமர்ரா” என்னும் ஊரில் 1971 இல் பிறந்தார். இவர் பக்தாத் பல்கலைக்கழகத்தில் “இஸ்லாமிய பிக்ஹு” துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார். ஆனாலும் தனது பெயருக்கு முன்பாக “கலாநிதி” என்ற பதத்தை இவர் பாவிப்பதில்லை.     

இவரது குடுமபத்தில் உள்ளவர்கள் பரம்பரை பரம்பரையாக இஸ்லாமிய போதகர்களாக விளங்கினர். சதாம் ஹுசைனின் ஆட்சிக்காலத்தில் இவர் “ஸமர்ரா” நகரில் உள்ளூர் இமாமாக கடமை புரிந்ததுடன், “இமாம் அஹமத் இப்னு ஹம்பல்” மஸ்ஜிதில் “அல்-ஜிஹாதியா” அடிப்படையிலான சிந்தனைகளை கற்றுள்ளார்.

ஈராக்கில் அமெரிக்க படைகளுக்கு எதிராக ஆரம்ப காலங்களில் நேரடியாக போர்க்களத்துக்கு சென்று சண்டைகள் செய்து வெற்றிகளையும், தோல்விகளையும் எதிர்கொண்டு போரியலில் நீண்ட அனுபவத்தை பெற்றிருந்தார்.

தொடரும்……………………….

………………………………………………………………………………………………………….

Related posts

வவுனியா சாரதியின் அசமந்தபோக்கு! வயோதிபர் காயம்

wpengine

மர்ம நோயால் வயோதிப தோற்றம்கொண்ட சிறுவன்

wpengine

ரிசாத் பதியுதீனின் கைது முஸ்தீபு நீதிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய கலங்கமாகும்!

wpengine