உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அரச விவகாரங்கள் வெளியே! பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் தளங்களை முடக்கியது வட கொரியா

அரச விவகாரங்கள் வெளியே கசிவதால், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் தளங்களை முடக்குவதாக வட கொரியா உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளது.

அந்நாட்டின் தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் இணையத்தளங்களுடன், அரசுக்கு எதிரான கொள்கைகளை வெளியிடும் இணையத்தளங்கள், பாலியல் சம்பந்தமான இணையத்தளங்கள் அனைத்தும் இந்த வாரத்திற்குள் முடக்கப்படும் என்றும் பியாங்யாங்கில் வெள்ளிக்கிழமை முதல் இந்த இணையத்தளங்களைப் பார்வையிட இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.

வட கொரியாவில் மிகக் குறைந்த நபர்களே இணையத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களும் இனி அரசு அனுமதிக்கும் இணையத்தளங்களை மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் தாமதமடைந்தால் சட்ட நடவடிக்கை

wpengine

முஸ்லிம் ஆசிரியை மீது மோதிய மோட்டார் சைக்கிள் (விடியோ)

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை, நாடாளுமன்றில் சலலப்பு!

Maash