பிரதான செய்திகள்

அரச வர்த்­த­மானி அறி­விப்பை ரத்துச் செய்யக்கோரி 38 சிவில் அமைப்புகள்

முசலி பிர­தேச செய­லாளர் பிரிவு மக்­களின் பாரம்­ப­ரிய நிலங்­களை மாவில்லு வன ஒதுக்­காகப் பிர­க­ட­னப்­ப­டுத்தும் அரச வர்த்­த­மானி அறி­விப்பை ரத்துச் செய்யக் கோரி 38 சிவில் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதனை இங்கு தருகின்றோம்.
மன்னார்மாவட்­டத்தின் முசலி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட மக்­க­ளுக்கு சொந்­த­மான பெரு­ம­ளவு பாரம்­ப­ரிய நிலங்­களை, வனப் பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் 3A பிரிவின் கீழ் மாவில்லு வன ஒதுக்­காகப் பிர­க­ட­னப்­ப­டுத்தும் அரச வர்த்­த­மானி அறி­வித்தல் இல. 2011/34 இனை மீளாய்ந்து நீக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடம், கீழே கையொப்­ப­மிட்­டுள்ள நாம் வேண்­டுகோள் விடுக்­கிறோம்.

இவ் வர்த்­த­மானி அறி­விப்­பினால் முசலி பிரி­வி­லுள்ள கர­டிக்­குழி, மறிச்­சுக்­கட்டி, வில்­லாத்­திக்­குளம், பெரிய முறிப்பு, மாவில்லு மற்றும் வெப்பல் உட்­பட பல கிரா­மங்கள் தீவி­ர­மாகப் பாதிக்­கப்­படும். முசலி பிரிவைச் சேர்ந்த மக்­களின் சார்­பாக, அவர்­களின் கருத்து வெளிப்­பாடு மற்றும் நீதிக்­கான உரி­மைக்­க­மை­வாக நாம் இவ் வேண்­டு­கோளை விடுக்­கின்றோம்.

இவ் வர்த்­த­மா­னி­யா­னது காட­ழிப்பு மற்றும் வில்­பத்து வன ஒதுக்கில் இடம்­பெறும் நில ஆக்­கி­ர­மிப்பு என்­ப­வற்றைக் கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் வரை­யப்­பட்­டது என்­பதை நாம் புரிந்­து­கொள்­கிறோம். வனப் பாது­காப்பை உறு­தி­செய்­வ­தற்கு ஒரு­மித்த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டு­மெ­னினும், இவ் வர்த்­த­மானி அறி­விப்பும், அதுவரை­யப்­பட்ட முறையும், நில உரிமைக் கோரிக்கைப் பிரச்­சி­னையின் வர­லாற்­றையும், அத­னுடன் தொடர்­பு­டைய மக்­களின் உரி­மை­க­ளையும் கணக்கில் எடுக்கத் தவ­றி­விட்­டன.

இது தொடர்பில் திருத்த நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டா­விடின், கொடூர யுத்­தத்தின் பின் இவ்­வி­டத்தில் மீள்­கு­டி­யேறித் தமது வாழ்வை மீளக்­கட்­டி­யெ­ழுப்ப முயலும் மக்கள் பாரிய எதிர்­வி­ளை­வு­களை எதிர்­நோக்க நேரிடும் எனவும், இது போருக்குப் பிந்­தைய மீள்­கட்­ட­மைப்புப் பணிகள், அரசு மற்றும் சிறு­பான்­மை­யி­ன­ருக்­கி­டை­யி­லான உறவு என்­ப­வற்றின் மீது  கடு­மை­யான பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எனவும் நாம் அஞ்­சு­கிறோம்.

1990 இல் முஸ்லிம் மக்கள் தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­தையும், போரின் கார­ண­மாக மக்­களிற் பெரும்­பாலானோர் வெளி­யேறி, மீண்டுந் திரும்­பு­வ­தற்­கி­டை­யி­லான 30 வருட இடை­வெ­ளி­யையும் தவிர்த்து நோக்கின், முசலி பிர­தேச மக்கள் (முஸ்­லிம்கள், தமிழர் மற்றும் சிங்­க­ளவர்) இப் பிர­தே­சத்தில் பல தசாப்­தங்­க­ளா­கவோ அல்­லது பல நூறாண்­டு­க­ளா­கவோ வாழ்ந்து வரு­கின்­றனர். இம் மக்­களில் பெரும்­பா­லானோர் நெற் சாகு­படி மற்றும் கால்­நடை வளர்ப்பு என்­ப­வற்றை உள்­ள­டக்­கிய நிலஞ் சார் பொரு­ளா­தா­ரத்திற் தங்­கி­யுள்ள விவ­சா­யி­க­ளாவர்.

ஆயினும் சமீ­பத்தில் அறி­விக்­கப்­பட்ட வன எல்­லை­யா­னது, இம் மக்­க­ளுக்குப் ‘பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட வனப் பகு­தி­யினுள்’ உள்ள அவர்­களின் குடி­யி­ருப்பு, விவ­சாயம் மற்றும் மேய்ச்சல் நிலங்­களை மறுக்­கின்­றது. மேலும், மக்­களின் சொந்த மற்றும் அவர்­களால் உப­யோ­கப்­ப­டுத்­தப்­படும் நிலம் மட்­டு­மல்­லாது, மக்­கட்­தொ­கையின் இயல்­பான வளர்ச்சி மற்றும் வாழ்­வா­தா­ரத்­திற்கு அவ­சி­ய­மான மேல­திக நிலமும் இதனால் இழக்­கப்­படும்.

இவ் வர்த்­த­மானி அறி­விப்­பின்­படி, அண்­ண­ள­வாக 40,030 ஹெக்­டே­ய­ர­ளவு பிர­தேசம்,  விரி­வு­ப­டுத்­தப்­பட்ட மாவில்லு வன ஒதுக்­கினுள் உள்­ள­டக்­கப்­படும். இதனால் வர­லாற்­றினால் இணைக்­கப்­பட்ட முசலி தெற்கு மற்றும் முசலி வடக்குச் சமூ­கங்கள் (இரண்டும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­களை உள்­ள­டக்­கிய சமூ­கங்கள்) ஒன்­றி­லி­ருந்­தொன்று துண்­டிக்­கப்­பட்டு, முசலி பிர­தேச செய­லாளர் பிரி­வா­னது இரண்­டாகப் பிள­வு­ப­டுத்­தப்­படும். இதன் கார­ண­மாக ஒன்­றி­லி­ருந்­தொன்று துண்­டிக்­கப்­பட்ட தனித்த மக்கள் கூட்­டங்கள் உரு­வாகும். இது மக்­களைத் தனி­மைப்­ப­டுத்­து­வ­தோடு, அவர்­க­ளது அசை­யு­மாற்­றலைக் கட்­டுப்­ப­டுத்தி, அவர்­க­ளுக்­கி­டை­யி­லான சமூகப் பரி­மாற்­றங்­களைக் குறைக்கும். மேலும், வன எல்­லை மக்­களின் வீட்டு எல்­லை­க­ளுக்கு மிக அருகில் வரு­வதால், மனி­த – -­வி­லங்கு இடைத்­தாக்கம் அதி­க­ரித்து, ஏற்­க­னவே பாரிய மன­வ­ழுத்தத்தில் உள்ள மக்­களை ஆபத்­துக்­குள்­ளாக்கும்.

முசலி மக்கள் தமது வாழ்வு, இருப்­பிடம், வாழ்­வா­தாரம் மற்றும் சமூ­கங்­களை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பப் போராடி வரு­கின்­றனர். மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட உத­வியும், வளங்­களும் அவர்­களின் வாழ்வை இன்னும் கடி­ன­மாக்­கி­ய­தோடு, நிரந்­தர மீள்­கு­டி­யேற்­றத்தில் வீழ்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. முசலி தெற்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்­த­வர்­களில் 40% ஆனோரே திரும்­பி­வந்­துள்­ளனர். இவ் வர்த்­த­மானி அறி­விப்­பு, எஞ்­சிய 60% மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தின் மீது கடு­மை­யான அழுத்­தத்தை ஏற்­ப­டுத்தி, இப் பிராந்­தி­யத்தில் சமூக வளர்ச்­சியை மேலும் பின்­ன­டையச் செய்யும்.

முச­லி­யி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்தோர் மற்றும் திரும்­பி­யோரின் நிலை­, ஏனைய இடம்­பெ­யர்ந்தோர் சமூ­கங்­களின் அவல நிலையைப் போல் வருந்­தத்­தக்­க­தா­கவே உள்­ளன. வனப் பாது­காப்பு மற்றும் மீள்­கு­டி­யேற்றம் என்­பவற்­றுக்­கி­டை­யி­லான முரண்­பட்ட கூற்­றுக்கள், வில்­பத்து மற்றும் அதன் வடக்கு எல்­லைக்கு மட்டும் தனித்­து­வ­மா­ன­தல்ல என்­பதை நாம் நினைவிற் கொள்­வது முக்­கி­ய­மா­னது.

வடக்கு, கிழக்கு முழு­வதும் இது போன்ற முரண்­பா­டு­களை நாம் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. கரு­வேப்­பக்­குளம் (ஒதி­ய­மலை, ஒட்­டு­சுட்டான் பிர­தேசச் செய­லாளர் பிரிவு, முல்­லைத்­தீவு), கிரான் கோமாரி மற்றும் வேகாமம் (பொத்­துவில் பிர­தேச செய­லாளர் பிரிவு, அம்­பாறை) மற்றும் மயி­லாட்­ட­மடு மத­வணி (கோற­ளைப்­பற்று தெற்கு, மட்­டக்­க­ளப்பு) போன்ற பல பிர­தே­சங்­களில் மீள்­கு­டி­யேறத் திரும்பி வரும் மக்கள், தமக்கு சொந்­த­மான அல்­லது தாம் முன்பு பயன்­ப­டுத்­திய நிலங்கள், பாது­காக்­கப்­பட்ட வனப் பிர­தே­சங்­க­ளாக, சில சந்­தர்ப்­பங்­களில்  காணி நிர்­வா­கத்­துக்குப் பொறுப்­பான மாவட்ட நிலை அதி­கா­ரி­களின் ஆலோ­ச­னையைப் பெறா­ம­லேயே, எல்­லைப்­ப­டுத்­தப்­பட்டு அறி­விக்­கப்­பட்­டுள்­ளதைக் காண்­கின்­றனர்.

முச­லியின் தற்­போ­தைய இந்நிலை­, போரினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் நிலவும் நிலந் தொடர்­பான பிரச்­சி­னைகள் தொடர்பில் அரசின் அணு­கு­மு­றை­யி­லுள்ள பாரிய பிரச்­சினை ஒன்றை சுட்­டு­கின்­றது. போரின் பின் பல அரச முக­வ­ர­கங்கள், குறிப்­பாக இரா­ணுவம், மக்­க­ளுக்குச் சொந்­த­மான அல்­லது அவர்­களால் உரிமை கோரப்­பட்ட நிலங்­களிற் தொடர்ந்தும் நிலை­கொண்­டுள்­ளன. வடக்கு மற்றும் கிழக்­கி­லுள்ள சில பகு­தி­களை அரசு மக்கள் மீள்­கு­டி­ய­மர விடு­வித்­துள்­ள­போதும், பல சமூ­கங்கள் இன்னும் தமது பாரம்­ப­ரிய நிலங்­களைத் திரும்பப் பெற முடி­யாத நிலையில், நில விடு­விப்புத் தொடர்பில் அரசின் அணு­கு­முறை மீது விரக்­தி­யுற்­றுள்­ளன.

பனாம (அம்­பாறை) இல் உள்ள பெரும்­பாலும் சிங்­களக் குடும்­பங்கள், அஷ்ரப் நகர் (அம்­பாறை) மற்றும் சிலா­வத்­துறை (முசலி) இல் உள்ள முஸ்லிம் குடும்­பங்கள் மற்றும் வடக்கு முழு­வ­து­முள்ள (முச­லி­யி­லுள்ள முள்­ளிக்­குளம் மட்­டு­மல்­லாது) தெல்­லிப்­பழை (யாழ்ப்­பாணம்) மற்றும் கேப்­பாப்­பு­லவு (முல்­லைத்­தீவு) போன்ற பல இடங்­க­ளி­லுள்ள தமிழ்ச் சமூ­கங்கள் இன்னும் தமது சொந்த இடங்­களிற் குடி­ய­ம­ர­வி­ய­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. இப் பிர­தே­சங்­களில் தொடர்ந்தும் பல்­வேறு அரச முக­வ­ர­கங்கள் நிலை­கொண்டும், நிலங்­களை ஆக்­கி­ர­மித்தும் உள்­ள­மை­, மக்கள் மத்­தியில், குறிப்­பாக சிறு­பான்மைச் சமூ­கங்கள் மத்­தியில் தமக்கு சொந்­த­மான நிலங்­களைத் தம்­மி­ட­மி­ருந்து பறிப்­ப­தற்கு அரசு முயல்­கி­றதோ என்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது.

மக்­களின் நிலம் தொடர்­பான இப் பிரச்­சி­னைகள் கையா­ளப்­படும் முறை­, ஜுன் 2016 இல் அமைச்­ச­ர­வையால் அங்­கீ­க­ரிக்­கப்­பட, இனப்­பி­ரச்­சி­னையால் பாதிக்­கப்­பட்ட நபர்­க­ளுக்­கான நீடித்து நிற்குந் தீர்­வுகள் தொடர்­பான தனது சொந்தத் தேசியக் கொள்கை மீது அரசு காட்டும் விசு­வாசம் தொடர்பில் பாரிய கேள்­வி­களை எழுப்­பு­கின்­றது.

வனப் பாது­காப்புத் திணைக்­களம் மற்றும் வனச்­சீ­வ­ரா­சிகள் பாது­காப்புத் திணைக்­களம் போன்ற அரச அமைப்­புகள், மாவட்ட நிலை அதி­கா­ரிகள் மற்றும் உள்ளூர் சமூ­கங்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டாது நிலங்­களை வர்த்­த­மா­னிப்­ப­டுத்­து­வ­தி­லுள்ள பிரச்­சி­னை­களை இத் தேசியக் கொள்­கையின் பிரிவு VII.2 தெளி­வாகக் குறிப்­பி­டு­கின்­றது. மேலும் தனி­நபர் பிணக்­கு­களை மீளாய்வு செய்­வ­தற்கும், அவற்றைத் தீர்ப்­ப­தற்கு வெளிப்­ப­டை­யான ஆலோ­சனை செயன்­மு­றை­யொன்றைச் சுவீ­க­ரிப்­ப­தற்கும் உதவுமொரு செயன்முறையையும் அப் பிரிவு குறிப்பிடுகின்றது. இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான நீடித்து நிற்கும் தீர்வுகள் தொடர்பான தேசியக் கொள்கையை உடனடியாக அமுல்படுத்தவேண்டுமென நாம் கோருகிறோம்.

இடம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிந்தாலும், இடம்பெயர்ந்து தமது சொந்தவிடங்களுக்குத் திரும்பியவர்களும், இடம்பெயர்ந்து வேறிடங்களில் வாழ்பவர்களும் தமக்கானவொரு நீடித்து நிற்குந் தீர்வினை இன்னும் அடையவில்லையென்பதே நிதர்சனமாகும். இதை ஒரு வரலாற்றுத் தேவையாகக் கருதி, மார்ச் 2017 இன் அரச வர்த்தமானி அறிவித்தல் 2011/34 இனை உடனடியாக ரத்துச் செய்து, 1992 ஆம் ஆண்டின் பிரதேசச் செயலக வரைபடத்தின்படி முசலி தெற்கு எல்லையை மீள அறிவித்துப் பின் பொது ஆலோசனைக்கிணங்க காட்டு எல்லையை வரையறுப்பதன் மூலம் ஜனாதிபதி முசலி மக்களின் கவலைகளைத் தாமதமின்றி, நியாயமானதொரு முறையில் தீர்க்க வேண்டுமென நாம் கோருகிறோம்.

Related posts

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு!

Editor

சிறுபான்மை மக்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோமேயானால் சஜித் பிரேமதாச பாரியவெற்றியை பெறுவார்.

wpengine

மன்னார்- கீரி கத்தர் கோவிலுக்கு டெனிஸ்வரன் சீமெந்து நன்கொடை

wpengine