பிரதான செய்திகள்

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள்! ஜனாதிபதி ஆணைக்குழு

2015 ஜனவரி 14ஆம் திகதியிலிருந்து 2018 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படுகின்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபயரத்தனவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவில் மேலும் 4 உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.

முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன ஓய்வு பெற்ற கணக்காய்வாளர் நாயகம் பீ.ஏ. பேமலதிலக்க ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் லலித் ஆர் டீ சில்வா ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜய அமரசிங்க ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம்

wpengine

2017 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் இன்று ஆரம்பம்

wpengine

பொதுநலவாய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்!

Editor