பிரதான செய்திகள்

அரச சேவை கட்டணம் 15வீத அதிகரிப்பு! மூன்று வருடத்தின் பின்பு

2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய அரசாங்க சேவைகளுக்காக அறிவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைக்கான கட்டணமாக நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய கடவுச்சீட்டு, அடையாள அட்டை, தபால் கட்டணம், மிருகக்காட்சி சாலை கட்டணம், நீதிமன்ற சேவை கட்டணம் மற்றும் ஏனைய அனைத்து அரசாங்க சேவைகளின் கட்டணங்களும் நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் இந்த சேவைகளுக்கான கட்டணம் கடந்த 3 வருடங்களாக அதிகரிக்கப்படவில்லை. அவ்வாறு அதிகரிக்கப்படாத கட்டணங்கள் தற்போது அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, உரையாற்றும் போது நிதியமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

Related posts

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளுக்கு தண்டப்பணம் அறவீடு

wpengine

அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை

wpengine

அகதி என்ற வார்த்தை எளிதாக இருந்தாலும் அனுபவிக்கும் போது தான் அதன் கஷ்டம் புரியும்-அமைச்சர் றிஷாட்

wpengine