உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அரச குடும்பத்தினரின் அரண்மனை அருகே துப்பாக்கிப் பிரயோகம்

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள அரச குடும்பத்தினரின் அரண்மனை அருகே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அரச குடும்பத்தினரின் அரண்மனையை வட்டமிட்டு ஆளில்லா விமானம் ஒன்று வேவு பார்த்ததாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் அந்த ட்ரோன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சவுதி அரசர் சல்மான் பாதுகாப்பான பகுதிக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக சவுதியை குறி வைத்து ஹெளதி போராளிகள் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் பாதுகாப்பு மிகுந்த சவுதி அரண்மனை அருகே ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது சவுதி அரச குடும்பத்தினருக்கு எதிராக சதி முயற்சியாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஆனால் அதை மறுத்துள்ள அதிகாரிகள், அதற்கான சூழல் எதும் தற்போது இல்லை எனவும், ஒருமித்த கருத்துடனே அனைத்து அரச குடும்பத்தினரும் இயங்குவதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

கெஜ்ரிவாலை படுகொலை செய்யப் போகிறோம். முடிந்தால் அவரை காப்பாற்றி கொள்ளுங்கள்

wpengine

அடுத்த முதலமைச்சர் என்று தடுமாறிய விக்னேஸ்வரன்

wpengine

சிலாவத்துறை கடற்கரையில் பரிதாப நிலையில் உயிர் இழந்த முஸ்லிம் இளைஞன்

wpengine