பிரதான செய்திகள்

அரச ஒசுசல இணையதளத்தின் ஊடாக மருந்து வினியோகம்

ஊரடங்கு வேளைகளில் நோயாளிகள் எதிர்நோக்கும் கஷ்டங்களை கருத்திற்கொண்டு அரச ஒசுசல இணையம் மூலமான விநியோகத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அரச ஒசுசலவின் தலைவர் வைத்திய கலாநிதி பிரசன்ன குணசேன இதனை தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக அரச ஒசுசலவுக்கு மூன்றில் ஒரு பணியாளர்களே பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


இவர்களை கொண்டு நோயார்களின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாது.
எனவே இணைய சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இந்த பணிகளுக்கான பத்து நாட்கள் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார்.


நாட்டில் 3,500 தனியார் மருந்தகங்கள் மற்றும் 48 ஒசுசல விற்பனை நிலையங்கள் உள்ளன. எனினும் தற்போதுள்ள நிலையில் ஒசுசலவை மாத்திரமே திறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஆகையினால், நோயாளிகளின் அதிக தேவைகளை தனித்து ஒசுசல பணியாளர்களால் பூர்த்தி செய்யமுடியாதுள்ளது.


எனினும் ஒசுசலவின் இணைய செயலிப்பயன்பாடு ஆரம்பிக்கப்பட்டதும் தற்போதுள்ள நிலையை மேம்படுத்த முடியும் என்று ஒசுசலவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தநிலையில் நாளை, நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் 6 திகதி நாட்டின் அனைத்து மருந்தகங்களையும் திறந்துவைக்குமாறு அரசாங்கம் இன்று மாலை கோரிக்கை விடுத்துள்ளது.


ஒசுசலவினால் நோயாளிகளின் தேவையை பூர்த்திசெய்யமுடியாது போனமையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

புத்தளத்தில் குப்பைகளை கொட்டும் திட்டத்தை எதிர்த்து இறுதிவரை போராடுவோம்!

wpengine

கேரளாக் கஞ்சாவுடன் ஈ.பி.டி.பி.கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் கைது

wpengine

Chinese coronavirus patient at IDH recovered completely – Dr. Jasinghe

wpengine