பிரதான செய்திகள்

அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தவறும் அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் மினிதியவர வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த பகுதியில் கடமையாற்றும் அரசு ஊழியர்கள் குறித்து தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அரச ஊழியர்கள் தமது கடமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும்.

இந்நிலைமை தவறும் பட்சத்தில் நாட்டில் நிலவும் சட்ட திட்டங்களுக்கிணங்க அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

கொரோனா அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய நடைமுறை

wpengine

ஈஸ்டர் தாக்குதல்; அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Editor

ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த பிக்குகளின் பலத்தை நிரூபித்து இருக்கின்றோம்.

wpengine