பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு தடைகளை நீக்குவது குறித்து பரிசீலினை- அமைச்சர் மனுஷ நாணயக்கார

அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஊழியர்களது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார்.

இதேவேளை, பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அந்நிய செலாவணி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பஹ்ரெனில் இலங்கை பெண்ணுக்கு நடந்த கொடுமை

wpengine

கிளிநொச்சி கோர விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன் – சாரதிக்கு 19ம் திகதி வரை விளக்கமறியல்!

Editor

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவுள்ள முன்னால் அமைச்சர்

wpengine