பிரதான செய்திகள்

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை 10ம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை!

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி கொடுப்பனவுகள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு துரித கதியில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ், ரயில்

wpengine

மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதுடன், ஆசிரியர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படும். கல்வி முறையில் மாற்றம் – அரசாங்கம்.

Maash

சேவைகளே நாட்டுக்கு தேவை புரட்சியை செய்யவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்- சஜித்

wpengine