பிரதான செய்திகள்

அரச உத்தியோகத்தர்களுக்கு பரீட்டை நடாத்தும் சம்பிக்க

அரச உத்தியோகத்தர்களுக்கான இலகு கடமை நேர நடைமுறை எதிர்வரும் 18ம் திகதி பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஆரம்பத்தில் மூன்று மாதங்கள் வரை இதனை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் அரச உத்தியோகத்தர்கள் காலை 7.15 தொடக்கம் 9.15 வரையில் அலுவலகத்துக்கு வருகை தரமுடியும். மாலையில் 3.15 தொடக்கம் 5.00 மணி வரையில் பணிநிறைவு செய்து வௌியேறிச் செல்ல முடியும்.

ஆனால் எல்லாப் பணியாளர்களும் காலை 9.15 முதல் மாலை 3்.15 வரை கண்டிப்பாக அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்.

பொதுப் போக்குவரத்துத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைத்துக் கொள்வதற்கான வழிமுறையாகவும் இந்தப் பரீட்சார்த்த நடைமுறை மூன்று மாதங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

முதல்கட்டமாக பத்தரமுல்லைப் பிரதேசத்தில் பணியாற்றும் அரச ஊழியர்கள் பரீட்சிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அதன் பின்னர் கிடைக்கும் பெறுபேறுகளைப் பொறுத்து இதனை நாடுதழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம்களின் அபிலாஷைகளை புறந்தள்ளும் எந்தவொரு மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் றிசாத்

wpengine

அஸாத் சாலி மவுனாமாக இருப்பதே அவர் சமூகத்துக்கு செய்யும் மிகப்பெரிய சேவை

wpengine

உள் விவகாரங்களில் டொனால்ட் ட்ராம்ப் தலையீடு செய்ய மாட்டார்-மஹிந்த

wpengine