பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ். மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் (Nagalingam Vedanayagan) தெரிவித்துள்ளார்.

அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் அண்மையில் இடம்பெற்ற தனது சேவை நயப்பு விழாவில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரசியல்வாதிகளின் சொல்லைக் கேட்டு செயற்படுத்தும் அதிகாரியாக இல்லாது பொதுமக்களுக்கு பொது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகானும் ஒரு அரச உத்தியோகத்தர்களாகவே செயற்பட வேண்டும்.

தற்போது பலரும் கூறுகின்றார்கள் 65 வயது வரை ஓய்வு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக. ஆனால் எனக்கு தெரியும் இந்த கால கட்டத்தில் என்னால் கடமையாற்ற முடியாது.

நான் நேர்மையாக கடமையாற்றியதன் காரணமாக தற்போதைய ஊழல்வாதிகளுடன் இணைந்து என்னால் கடமையாற்ற முடியாது. அதன் காரணமாகவே என்னை வேறு இடங்களுக்கு மாற்ற முயற்சித்தார்கள்.

எனினும் நான் ஓய்வினை பெற்றுக் கொண்டேன். நான் கடமையாற்றிய காலத்தில் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் முன்னுரிமை கொடுத்துச் செற்பட்டதில்லை.

அது அனைவரும் அறிந்ததே. தற்போதுள்ள நிலையில் சில பிழையான விடயங்களை செய்ய தூண்டியவர்களுடன் என்னால் கடமையாற்ற முடியாது என தெரிவித்துள்ளார். 

Related posts

சிலாபம் பகுதியில் புயலில் சிக்கிய மீன்பிடி படகு மற்றும் 2 மீனவர்கள் மாயம்..!!!!!

Maash

“சகல மாணவர்களுக்கும் உயர்தரம் பிழையான முடிவு”

wpengine

இந்திய துணைத்துாதுவருடன் திருக்கேதீஸ்வர திருத்த வேலைகளை பார்வையீட்ட பா.டெனிஸ்வரன்

wpengine