Breaking
Sun. Nov 24th, 2024

(அனா)

மக்களின் துன்பங்களை துயரங்களை புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் எத்தகைய கட்டடங்கள் அமைப்பதும் பிரயோசனம் இல்லை. உண்மையில் மக்களின் தேவைகளை புரிந்து செயலாற்றுகின்ற அதிகாரிகள் மிக முக்கியம் வாய்ந்தவர்கள் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்.

மிகப் பெரும்பான்மையோரின் விரும்பதான் ஜனநாயகம் என்றாலும், காலியைப் பொறுத்தவரையில் ஜனநாயகத்தை முற்றிலும் செய்கின்ற நிலையில் நான் இல்லை. ஏனெனில் காலி நகரத்தை எடுத்துக் கொண்டால் அதிகமானவர்கள் சிங்களவர்களாக இருக்கின்றார்கள்.

இப்பிரதேசத்தில் இருபத்தி நான்காயிரம் பேர் உள்ளனர். அதில் 55 தமிழ் மக்களும், எந்தவித சிங்கள மக்களும் இல்லை என கூறப்படுகின்றது. காலியை போன்று இங்கும் முஸ்லிம் மக்கள் பின்பற்ற வேண்டும். நாம் எல்லோரும் ஓரினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது.

அமைச்சர் அமீரலி காண்கின்ற எல்லா நேரங்களிலும் இப்பிரதேசத்தின் பிரச்சனைகள் பற்றி பேசுவதில் கவனமாக இருப்பார். தற்போது புரிந்து கொண்டேன் எங்களையும் தவறான வழியில் கொண்டு சென்றுள்ளார் என்று. இருபத்தி நான்காயிரம் பேர் உள்ளனர். அதில் ஏழாயிரம் குடும்பங்கள் இருக்கின்ற பொழுது இக்கட்டத்திற்கு ஒதுக்கிய மொத்த தொகை எண்பது மில்லியன் ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 இலட்சத்து பதினெட்டாயிரம் பேரைக் கொண்ட சனத்தொகை உள்ளது. இங்கு 168000 குடும்பம் உள்ளது. இந்தக் குடும்பங்கள் அனைத்தையும் கவனிப்பதற்காக 2500 அதிகாரிகள் இங்கு இருக்கின்றார்கள்.

நானூறு வருடங்களுக்கு பிறகு எட்டாயிரம் இலட்சத்துக்கு கட்டடத்தை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தேவைகளும் நிறைவு செய்திருக்கும் என்று நான் நம்பியிருந்தேன்.

தற்போதைய அரசாங்கம் எதிர்காலத்திலும் இருக்குமானால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவோம்.

எத்தகைய தொகையை கொண்டு அபிவிருத்தி செய்தாலும் இப்பிரதேசத்து அதிகாரிகள் மக்களின் கவனம் செலுத்தாத வரை, அரசாங்க அதிகாரிகள் நினைத்து விடக் கூடாது அரசியல்வாதிகள் சொல்வதை செய்வதற்கு நாங்கள் இல்லை என்று.

அரசியல் யாப்பின் குறிப்பிடப்பட்டிருப்பது அரச துறையில் நியமனம் பெறுபவர்கள் சமகால அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய கடைப்பாடுடன் உள்ளார்கள். அரசாங்கத்தின் கொள்ளைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது.

கடந்த பத்து வருடங்கள் நடைபெற்றது மகிந்த சிந்தனை என்ற கொள்கை. அதனை சரியாக நிறைவேற்றிய அதிகாரிகள் உண்மையில் திறன் வாய்ந்த அதிகாரிகள். இந்த மகிந்த சிந்தனை 2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதிக்குப் பின்னரும் 2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்னரும் புதிய அரசியல் கலாசாரம், நிர்வாக முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் விடுகின்ற கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் இல்லையென்று இந்த அதிகாரிகள் நினைத்துவிடக் கூடாது. அரசியல் யாப்பில் உள்ளவாறே நான் குறிப்பிடுவது எனது சொந்தக் கருத்தல்ல.

தாபனக் கோவை மற்றும் அரசியல் யாப்பில் கூறப்பட்ட விடயங்களை பின்பற்றினால் அதிகாரிகள் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாக முடியாது. அரசியல்வாதிளை எங்களை அனுப்புவது நீங்களே. தபால் மூலமாகவும், வாக்கெடுப்பிலும் அதிகாரிகளே பங்கு கொள்கின்றனர்.

மக்களின் துன்பங்களை துயரங்களை புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் எத்தகைய கட்டடங்கள் அமைப்பதும் பிரயோசனம் இல்லை. உண்மையில் மக்களின் தேவைகளை புரிந்து செயலாற்றுகின்ற அதிகாரிகள் மிக முக்கியம் வாய்ந்தவர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை மிக அதிகமாக உள்ளது. முதலமைச்சர் இந்த மாகாணத்தில் செய்யவுள்ள வேலைத் திட்டங்களை குறிப்பிட்டார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் கூறுவது வடக்கு கிழக்கு மாகாணத்தில் முக்கியத்தும் வழங்க வேண்டும் என்று.

இப்பிரதேசத்தில் எத்தகைய உதவிகளும் இனி தேவையில்லை. ஏனென்றால் எங்களை திசை திருப்பி அமைச்சர் அமீரலி தேவைப்பட்ட பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இங்கு கிராம சேவகர் பிரிவு எண்பது என்று நினைத்தேன். ஆனால் எட்டுத்தான் உள்ளது. இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கும்.

எனது அமைச்சின் கீழ் கிராம சேகவர்கள் 14022 பேரும், மாவட்ட செயலாளராக இருபத்தைந்து பேரும், பிரதேச செயலாளர்களாக 332 பேரும் உள்ளனர். இதன் கீழ் காணிப் பதிவுத் திணைக்களம், பிறப்பு மற்றும் இறப்பு, விவாகப் பதிவுகளை செய்யும் திணைக்களமும் உள்ளன.

அண்மையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதினேராயிரம் பேரை உட்கொண்டுள்ளோம். கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் கைப் பைகளை வழங்கியுள்ளோம். அத்தோடு அரச இலட்சனை மற்றும் மேலும் உதவிகளை வழங்க உள்ளோம். நீங்கள் மக்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இப்பிரதேசம் 2012ம் ஆண்டு எல்லை நிர்ணயம் செய்யப்படாலும் அவை வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை. மிக அண்மைக் காலத்தில் வர்த்தமானியில் பதிவு செய்யவிருக்கின்றோம். அந்த வகையில் பிரதேச மற்றும் மாவட்ட செயலாளருக்கு நீங்கள் குறிப்பிடுகின்ற மீள் எல்லை நிர்ணயம் தொடர்பில் உங்களது கருத்தை தெரிவிக்க முடியும்.

இலங்கையில் தமிழர், சிங்களவர். முஸ்லிம்கள் என்றில்லாமல் அனைவரும் இலங்கையர் என்று ஏன் வாழ முடியாது. 1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது இரண்டு மொழிகளிலும் இசைத்தோம். பின்னர் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதை மறைத்து விட்டார்கள். தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலில் நாங்கள் இரண்டு மொழிகளிலும்; தேசிய கீதத்தை இசைத்தோம்.

எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒரே நாட்டினர், ஒரே இலங்கையர் என்ற வகையில் நாட்டை முன்னேற்ற வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட மக்களும் குறைந்தவர்கள் அல்ல என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *