(அஷ்ரப். ஏ . சமத்)
கொழும்பு மாநகரில் 90 வீத மான இடங்கள் அரசுக்கு சொந்தமான காணிகளாகும் .அவற்றில் அனேகமானோா் சட்ட விரோதமாக அவற்றை அபகரித்து கொண்டு அந்த இடங்களில் சட்டவிரோதமாகவே பிடித்துக் கொண்டு ஆட்சி புரிகின்றனா். இந்தக் காணிகள் , நகர அபிவிருத்தி அதிகார சபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, தபால் திணைக்களம், ரயில்வே திணைக்களம், கொழும்பு மாநகர சபை இவ்வாறு பல அரச நிறுவனங்களுக்கு சொந்தமாகும் . ஒரு சிலருக்கு உரிமைப் பத்திரம் இருந்தாலும் ஏனைய 90 வீதமானவை அரசுக்கு சொந்தமானவை. என மேல்மாகாண அபிவிருத்தி நகர அமைச்சா் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தாா்.
இன்று (1)ஆம் திகதி செத்சிரிபாயவில் அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் உள்ள மேல்மாகாண மெகா பொலிஸ் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே அமைச்சா் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
அவா் அங்கு தொடா்ந்து தகவல் தருகையில் –
ஒரு சிலா் அரச காணிகளை அபகரிதக்கும் மாபியாக்கள் உள்ளனா். அவா்கள் அதற்காக குழந்தைகளையும், சவப் பெட்டிகளையும் நடு வீதியில் வைத்து கொண்டு ஊடகங்களுக்கு முன் வந்து முகம் கொடுத்து கண்னீா் கதைகள் சொல்பவா்கள் . இவா்கள் இவ்வாறு ஊடகங்களுக்கு முன் வந்து நாடகம் ஆடுகின்றனா். ஊடகவியலாளா்களும் அவா்கள் சொல்லும் நடாகத்தையும் படத்தையுமே பெரிதாக விவரித்து அதனை வைத்து பாரிய கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதுகின்றீா்கள்.
ஆனால் நீங்கள் இரண்டு பக்கமும் சமமான தகவல்களை சேகரித்து சரியான செய்திகளையே பொது மக்களுக்கு எழுத வேண்டும். நகர அபிவிருத்தி அதிகார சபையின் வீடுகளை பெற்றுக் கொண்டும் இன்னொரு பகுதியினா் தாம் இருந்த சட்ட விரோத இடங்களையும் அரச இடங்களை மீள பிடித்துக் கொண்டுள்ளனா் . இதற்கு நான் அமைச்சராக இருக்கும் வரை இவ்வாறானவா்களது செயல்களுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை..
எதிா்வரும் மே 15 ஆம் திகதி க்கு முன் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடா் மாடி வீடுகள் 560 பகிா்ந்தளிகக்ப்படும். அதற்கு முன் இவா்கள் வாழ்ந்த வந்த சகல சட்டவிரோத குடிசைகளை விட்டு அகற்றுவிடுதல் வேண்டும். அதே போன்று பாதைகளிலும் பொது இடங்களிலும் ,அரச காணிகளை பிடித்துள்ளவா்களுக்கு மே 15 ஆம் திகதிக்கு முன் அவற்றினை விட்டு விலகிவிடல் வேண்டும். அவைகள் அணைத்தையும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடாக அகற்றப்படும்.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 2012ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 66ஆயிரம் முடுக்கு வீடுகள் உள்ளதாக புள்ளி விபர தகவல்கள் சேகரிக்கப்பட்டன. . இவற்றில் 2016ஆம் ஆண்டில் 56ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்க பட வேண்டியுள்ளது. இவா்கள் உதாரணமாக 16ஆயிரம் குடும்பங்கள் 900 ஏக்கா் அரச காணிகளை கொழும்பில் பிடித்துக் கொண்டுள்ளனா்.
இவை தவிர ”சுகுத்திபுரவ சிட்டி” அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் 27 நகரங்கள் 4000 மில்லியன் ருபாவிற்கான அபிவிருத்தித்திட்டங்கள் இந்த வருடத்திற்குள் ஆ்ரம்பிக்கப்பட உள்ளன. கடுவெலவில் சந்தை, மகரகமவில் பஸ் நிலையம், மல்டி கார் தரிப்பிடம், எந்தரமுல்ல விளையாட்டு மைதாணம், கழிவு நீர் அகற்றல் திட்டம், கோமகம பஸ் நிலையம், கொட்டாவ பஸ் நிலையம், மீரிகம விளையாட்டு மைதானம், கொரண பஸ் நிலையம், பிலியந்தல பஸ் நிலையம், காணி அபிவிருத்தி, களுத்துறை பஸ் நிலையம், வர்த்தக நிலையங்கள், ராகம கழிவு நீர்த் திட்டம், மீரிகம புகையிரத, பஸ் நிலைய அபிவிருத்தி, களுத்துறை பொது சந்தை, பாணந்துறை பொதுச் சந்தை, பொரளை எலியட் பிளேஸ், உடுப்பில் சந்தி, பாணந்துறை காணி அபிவிருத்தி, பொரளை மல்டி மண்டபம், விளையாட்டு மைதானம், வெள்ளம் பிட்டிய சந்தி கம்பஹா வீதிகள், போக்குவரத்து உள்ளுர் பாதை அபிவிருத்திகள், போன்ற பல்வேறு தி்ட்டஙக்ள மேல் மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப் படுகின்றது.
இதனை தவிர கண்டி காலி அபிவிருத்திகள் 4000 பில்லியன் ருபா செலவில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. எதிா்காலத்தில் வெளிநாட்டு நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருகோணமலை, யாழ்ப்பாணம், அநுராதபுரம் போன்ற பாரிய அபிவிருத்திகளுக்கான திட்டமிடல் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடனட மேல் மாகாண அபிவிருத்தி அதிகார சபை ஒனறும் நிறுவப்பட உள்ளது. அதற்காக இலச்சனை மற்றும் தமிழ் சிங்களத்தில் பொது மக்களிடம் கோறப்பட்டுள்ளது. அதில் சிறந்தவற்றுக்கு 1 இலட்சம் ருபா பரிசு வழங்கப்படும். எனவும் அமைச்சா் சம்பிக்க ரணவக்க தெரிவித்தாா்.