பிரதான செய்திகள்

அரசுக்கு எதிராக விமல்,கம்பன்வில பாரிய மக்கள் போராட்டம் விரைவில்

அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் கட்சிகள் உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் மக்கள் பேரணியொன்றை கொழும்பில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என அறியமுடிகிறது.

2015ஆம் ஆண்டு ஜனவரியில் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து ‘மஹிந்த சுலங்க’ என்ற பெயரில் நுகேகொடையில் கூட்டம் நடைபெற்ற அதே இடத்திலேயே இதுவும் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் அரசாங்கப் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும்  இம்மாத இறுதியில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாடு முழுவதும் மாவட்ட மட்டத்தில் கூட்டங்களை நடத்த பங்காளிக் கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

Related posts

சாஹிரா கல்லூரியின் பரிசளிப்பு! பிரதமர் பங்கேற்பு

wpengine

பேராளர் மாநாட்டின் தீர்மானங்கள்

wpengine

கூகுள் மற்றும் பேஸ்புக் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

wpengine